நம் உடலில் இருக்கும் உள்ளங்கை உள்ளங்காலில் மட்டும் முடி இல்லாததற்கு ஒரு சுவாரஷ்ய காரணம் உள்ளது.
நாம் உடல் தோலால் மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தோல் எல்லா இடத்திலும் ஒரே போல இருக்காது. நீங்கள் கவனித்துள்ளீர்களா? உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்காலில் உள்ள தோல், மற்ற பகுதிகளை விட மிகவும் தடிமனாகவும் வலுவாகவும் இருக்கும்.
நமது முகத்தில் சில மெல்லிய முடிகள் இருக்கும். இதுபோல உடலின் ஏனைய பகதிகளிலும் சிறு பெரிய முடி அந்த தோலுக்கு ஏற்றதை போல வளர்ந்திருக்கும்.
ஆனால் உள்ளங்கை,உள்ளங்காலில் முடி வளராது. இதற்கு காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.
உள்ளங்கை, உள்ளங்கால் தோல் மிகவும் கடினமாக இருக்கும். இந்த இடங்களில் முடி வளர்ச்சிக்குத் தேவையான சிறிய முடி நுண்குழாய்கள் இல்லை.
இந்த காரணத்தினால் தான் இங்கு முடி வளராது. நமது உடலில் எண்ணெய் உற்பத்தி சாதாரணமாக எல்லா இடங்களிலும் அதை சுரக்க சுரப்பிகள் இருக்கின்றன.
இவை முடியை ஈரப்பதமாக வைப்பதுடன் சருமத்தை மென்மையாக்குகின்றன. ஆனால், இந்த சுரப்பிகள் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்காலில் மிகக் குறைவு.
இங்கு முடி வளராததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதில் முக்கிய காரணமாக இருப்பது மரபணுக்கள் மற்றும் சிறப்பு புரதங்கள் ஆகும். இவை தான் நம் உடலில் எங்கு முடி வளர வேண்டும் வளர கூடாது என்பதை தீர்மானிக்கின்றது.
இந்த புரதங்கள் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் சுறுசுறுப்பாக செயல்படுவதனால் தான் அங்கு முடி வளர்ச்சியை தடுக்கின்றன. இந்த பகுதிகளில் முடி இருந்தால் தொடுகை உணர்வு குறையும்.
முடி இல்லாமல் இருக்கதால் தான் நாம் ஒரு பொருளை இறுக்கமாக பிடித்து நீண்ட தூரம் நடக்க முடிகிறது.
நமது வாழ்க்கையின் சில தேவைகளுக்காக மற்றும் வேலையை எளிதாக்க தான் உள்ளங்கை, உள்ளங்காலில் முடி வளர்வதில்லை என பார்க்கப்படுகின்றது.
ஆனால் மிகவும் அரிதாக இந்த பகுதிகளில் முடி வளரும் சம்பவங்களும் இருக்கின்றது. இந்த நிலை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தோல் காயங்களுக்குப் வடு, திசு மாற்றங்கள் அல்லது ஹைபர்டிரிகோசிஸ் எனப்படும் அரிய தோல் நிலை ஆகியவற்றால் உண்டாகலாம்.