ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் ஒருவரின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை,விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பிறப்பு ராசியின் தாக்கம் நேரடியாவே இருக்கும்.
அப்படி குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பொறுப்புணர்வு அற்றவர்களாகவும், உறவுகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணிப்பவர்களாகவும் இருப்பார்களாம். அப்படிப்பட்ட ரசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர்கள், வாழ்க்கையில் எப்போதும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இலக்கின் மீது அதீத ஆர்வம் கொண்டிருதால் மற்ற விடயங்களில் பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள்.
போட்டியை வெல்லும் போது அவர்கள் பெரும்பாலும் அவசர முடிவுகளை எடுப்பார்கள். தங்களுக்கு எட்டாத ஒன்றை சவால் செய்வதற்கு முன் மேஷ ராசிக்காரர்கள் சிறிதும் சிந்திக்க மாட்டார்கள்.
அவர்கள் பொதுவாக விஷயங்களை தங்கள் ஈகோவுக்கு எடுத்துக்கொள்கிறார்கள், இதனால் சூழ்நிலையிலிருந்து பிரச்சனையை உருவாக்குகிறார்கள். இவர்கள் உறவுகள் குறித்து பெரிதும் அக்களை செலுத்த மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வேடிக்கை மற்றும் மேன்மையால் நிறைந்தவர்கள்.இவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்வதில் கில்லாடிகளாகவும் இருப்பார்கள்.
அவர்கள் எப்போதும் உற்சாகத்திற்காக தேவையற்ற ஆபத்துக்களை எடுக்கிறார்கள். இவர்கள் சிறிய இன்பங்களுக்காக பெரிய பொறுப்புகளில் இருந்து எப்போதும் விலகியிருக்க ஆசைப்படும் குணம் கொண்டவர்கள்.
குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களின் முதிர்ச்சியற்ற நடத்தையால் எளிதில் ஏமாற்றமடைவார்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புளை இவர்கள் நிறைவேற்றுவதே கிடையாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் கவலையுடன் இருப்பவர்களுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் பொறுப்பற்ற நடத்தையால் இவர்களுக்கு இவர்களே துன்பத்தை தேடிக்கொள்வார்கள்.
அவர்கள் மிகவும் கவனக்குறைவாகவும் சுதந்திர மோகம் கொண்டவர்களாகவும் இருப்பதால், கண்முன் இருக்கும் பெரிய வாய்ப்புகளையும் இழந்துவிடுவார்கள்.
எப்போதும் பொறுப்புகளையும், கடமைகளையும் முற்றாக வெறுக்கும் இந்த ராசியினர் இந்த உறவிலும் நீண்ட நாட்களுக்கு நிலைப்பது கடினம் தான்.