பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் நகங்கள் உடைவது.

நகங்கள் உடைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் தொடர்ந்து செய்யும் சிறு தவறுகள் கூட இந்த நிலையை ஏற்படுத்தலாம்.

அதிலும் ஆண்களை விட பெண்கள் தான் நகங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நகங்கள் அடிக்கடி உடைவதால் சில கவலையடைவார்கள். ஏனெனின் மற்றவர்களை போன்று நகங்கள் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்காது.

நகங்களை அழகுப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் வந்தாலும், நமது உடலின் ஆரோக்கியம் நகங்களில் பார்க்கலாம். உதாரணமாக, என்ன நோய் வந்தாலும், அதன் அறிகுறிகளில் நகங்களின் மாற்றங்களை காணலாம்.

நகங்கள் அடிக்கடி உடையும்

அந்த வகையில், அடிக்கடி நகங்கள் உடைகிறது என்றால் அதற்கான காரணங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

1. நோய் நிலைமைகள்

பொதுவாக தைராய்டு பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்க அதிகமாக தற்போது வருகிறது. இது ஹார்மோன்கள் மாற்றங்கள் மற்றும் பரம்பரை ஆகிய இரண்டு காரணங்களால் அதிகமாக வரும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி நகங்கள் உடைய வாய்ப்பு உள்ளது. இது போன்று பெரியளவு பாதிப்பு இல்லாத நோய்களுக்கு நகங்கள் உடையும்.

உதாரணமாக தைராய்டு பிரச்சனை, குறை பிட்யூட்டரி செயல்பாடு, நீரிழிவுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலாசியா போன்ற நாளமிலா சுரப்பு வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் நகங்கள் உடையும்.

நகங்கள் அடிக்கடி உடையும்

2. நெயில் பாலிஷ் பாவனை

சில பெண்கள் தன்னுடைய கைகளை அழகாக வைத்து கொள்வதற்காக நெயில் பாலிஷ் போடுவார்கள். இவர்களை வீட்டிலும் நெயில் பாலிஷ் இல்லாமல் பார்க்க முடியாது. இப்படி வருட காலத்துக்கு தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது அதிலுள்ள கெமிக்கல்களின் தாக்கத்தை நகங்களில் பார்க்கலாம். இதனால் நகங்கள் சேதமடைந்து உடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

நகங்கள் அடிக்கடி உடையும்

3. அதிகமாக தண்ணீரில் வேலைப் பார்த்தல்

அதிகமாக தண்ணீரில் வேலைச் செய்பவர்களுக்கு நகங்களில் பிரச்சினை வரலாம். ஏனெனின் நகங்களில் பாக்டீரியாக்களின் தாக்கம் இருக்கும். அத்துடன் சில பெண்கள் துணிகளைத் துவைக்கும் போது கடினமான டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகளை பயன்படுத்துவார்கள். இது கூட நாளடைவில் நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நகங்கள் அடிக்கடி உடையும்

4. முறையற்ற பராமரிப்பு

நமது உடலில் அனைத்து உறுப்புக்களும், பாகங்களும் முறையான பராமரிப்பு இல்லாத போது சேதமடையும். நகங்களை நீளமாக்குதல், சுருக்குதல் உள்ளிட்ட அலங்கார வேலைப்பாடுகளை அடிக்கடி செய்தால் நகங்கள் பாதிப்படையும்.

நகங்கள் அடிக்கடி உடையும்

5. ஆரோக்கிய குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு உடலில் இருந்தால் அது பூஞ்சை தொற்றாக மாறி நகங்களை உடைக்கும். நகங்கள்பார்ப்பதற்கு கருப்பாக காணப்படும்.      

நகங்கள் அடிக்கடி உடையும்