பொதுவாக வீட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்படும் பொருட்கள் வீட்டில் வாஸ்துப்படி பலன்களை தரக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
அந்த வகையில் பல வீடுகளில் பார்க்கக் கூடிய ட்ரீம் கேட்சர்கள் (Dream catchers) வீட்டிலுள்ளவர்களுக்கு அதிகமான வாஸ்துப்பலன்களை கொடுக்கப்பதாக கூறப்படுகிறது.
வண்ணமயமான அலங்கார பொருட்கள் கொண்டு வீட்டை அழகாக மாற்றுவது போன்று பறவைகளின் இறகுகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ட்ரீம் கேட்சர்கள் பல வண்ணங்களால் செய்யப்பட்டிருக்கும். இதனை வரவேற்பு அறை மற்றும் படுக்கை அறைகளில் அநேகமாக பார்க்கலாம்.
ஒருவிதமான அழகையும் நிம்மதியையும் தருகிறது. நீண்ட நாள் உழைக்ககூடிய வகையில் கைகளால் நேர்த்தியாக செய்யப்படும் ட்ரீம் கேட்சர்களுக்கு பல பிராண்டுகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் கவனத்தை திருடி வரும் ட்ரீம் கேட்சர்களை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. அழகு
ட்ரீம் கேட்சர்களை படுக்கை அறை அல்லது வரவேற்பு அறையில் மாட்டி வைக்கும் பொழுது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பல வர்ணங்களில் சிறகுகள் பயன்படுத்தப்படுவதால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும்.
2. நீண்ட நாள் உழைப்பு
மற்ற வாஸ்துப் பொருட்களில் பார்க்க, கிராப் க்ளாஸி காட்டன் ட்ரீம் கேட்சர் ( Cotton dream catcher) LED லைட்டுகள் உடன் தயாரிக்கப்பட்டு பாவனைக்கு வருகிறது. இது நீடித்து உழைப்பின் அடையாளமாக இருக்கிறது. தரமான உற்பத்தியில் தயாரிக்கப்படும் ட்ரீம் கேட்சர்களை எங்கும் மாட்டி வைக்கலாம்.
3. மன நிம்மதி கிடைக்கும்.
ட்ரீம் கேட்சர்கள் வெள்ளை மற்றும் பிரவுன் நிற இறகுகள் தயாரிக்கப்பட்டிருந்தால், அதனை வாங்கி வீட்டில் வைக்கலாம். ஏனெனின் இதிலுள்ள வர்ணங்கள், அழகு மன நிம்மதியை கொண்டு வரும்.
4. கவன சிதறல்கள்
ட்ரீம் கேட்சரில் LED லைட்டுகள் பொறுத்தி வீட்டில் மாட்டி வைக்கும் பொழுது, வீட்டிற்கு கோபமாக வந்தாலும், நம்முடைய கவனத்தை சிதற வைக்கும். அவ்வளவு அழகுடன் கூடிய நேர்த்தி இதில் இருக்கும்.
5. ஆன்மீக பலன்கள்
'நல்ல அதிர்ஷ்டம்' முத்திரையுடன் சாலையோரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் இந்த பொருள் வட அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பழங்குடியினரின் தனித்துவத்தை காட்டுகிறது.