பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட பாபா வாங்கா கணிப்பில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தீர்க்கதரிசியான பாபா வாங்கா "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என அழைக்கப்படுகிறார்.
இவர், தன்னுடைய யதார்த்தமான கணிப்புக்களால் நடக்கவிருப்பதை முன்னரே கூறி எதிர்கால சந்ததியினரையும் கவர்ந்துள்ளார்.
கண் தெரியாமல் வாழ்ந்த பாபா வாங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும் தரிசனங்களால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அந்த வகையில், இன்னும் 3 மாதங்களில் பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டில் வரவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து பாபா வாங்கா கூறிய விடயங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
இன்னும் 3 மாதங்களில் பிறக்கவிருக்கும் 2026ஆம் ஆண்டில் மிகப்பெரிய பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் ஆகிய அனர்த்தங்களினால் கிரகத்தின் நிலப்பரப்பில் 7-8% ஐ பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இயற்கை அழிவுகள் காரணமாக அனைத்து நாடுகளிலும் உயிர்கள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதிக்கப்படும் என பாபா வாங்காவின் கணிப்பில் உள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் எந்த நாட்டில் நடக்கும் என்ற தெளிவான விளக்கம் இல்லை. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் அழிவுகளான ஐரோப்பாவில் வெப்ப அலைகள், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ மற்றும் பசிபிக் பெருங்கடல் அருகில் நில அதிர்வுகள் உள்ளன நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டன
மூன்றாம் உலகப்போர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உதாரணமாக, தைவானுக்கு எதிரான சீனத் தாக்குதல் மற்றும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி இராணுவ மோதல் போன்றவற்றை கூறலாம்.
உலக போர் ஆரம்பிக்கும் பொழுது உலக நாடுகள் அனைத்திலும் ஒரு பதட்ட நிலை உருவாகும். மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள், உலகளாவிய மோதலை அதிகரிக்கச் செய்யும்.
2026 இல் நாடுகளின் இராஜதந்திரம், அமைதி காத்தல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கள் பாபா வாங்கா கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.