ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு  ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேரை்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில், நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே வாழ்வில் உண்மைக்கும்,நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

உயிர்போகும் தருவாயிலும் உண்மையை மட்டுமே பேசும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Speaks The Truth

அப்படி எந்த கடினமாக சூழ்நிலைகளிலும் கூட உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில், உறுதியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

உயிர்போகும் தருவாயிலும் உண்மையை மட்டுமே பேசும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Speaks The Truth

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசியினர் இயல்பாகவே தங்களின் போர் குணம் கொண்டவர்களாகவும், தைரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றார்கள்.

இவர்கள் எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தங்களின் இந்த குணத்தை வாழ்வில் இறுதி வரையில் கடைப்பிடிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

இந்த ராசியினர் இயல்பிலேயே மற்றவர்களுக்கு துரோகம் செய்யவோ அல்லது ஏமாற்றவோ விரும்ப மாட்டார்கள், மேலும் எப்போதும் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்வதையே விரும்புவார்கள். உயிருக்கே ஆபத்து இருப்பதாக அச்சுறுத்தப்பட்டாலும் உண்மைக்கு புறம்பாக செயற்பட மாட்டார்கள்.

கன்னி

உயிர்போகும் தருவாயிலும் உண்மையை மட்டுமே பேசும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Speaks The Truth

கிரகமான புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் புத்திகூர்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும், எதிலும் முழுமையையும் நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் தங்கள் கடமை உணர்வுக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்.

அவர்கள் அனைத்து விஷயங்களையும் கூர்மையாக கவனிப்பவர்கள், இவர்களின் கண் முன் நடக்கும் எந்த அநீதியையும் தைரியமாக எதிர்த்து நிற்பார்கள். உண்மையை காக்க உயிழரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள்.

தனுசு

உயிர்போகும் தருவாயிலும் உண்மையை மட்டுமே பேசும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Speaks The Truth

குருபகவனால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள், சாகச குணத்துக்கும் சுதந்திர உணரவுக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.

ஆனால் ஒருபோதும் மற்றவர்களை பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும் என்று மனதளவில் கூட நினைக்க மாட்டார்கள். இவர்கள் எந்த உறவிலும் உண்மையாக இருப்பார்கள். 

உண்மையை மறைத்தால் தான் உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் உண்மையை வெளிப்படுத்துவதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.