தங்கம் அணிவதற்கு சரியான நாளும் சரியான இடமும் தெரிந்து இருந்தால் அதனால் பல நன்மைகள் கிடைக்கும்.

தங்கம் என்ற பொருளுக்கு தற்போது விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காரணம் இதற்கு வணிகம் மூலமும் ஜோதிடம் மூலம் நிறைய தொடர்பு உள்ளது.

தங்கம் எங்கு அணிந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். தங்கம் அணிவது ஒரு நபரின் செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

தங்கத்தை எங்கு எந்த நாளில் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்? | Where Which Day Wearing Gold Bring Good Results

அதிலும் ஜோதிட சாஸ்திரத்தில் சிம்மம், துலாம், கன்னி, மகரம் மற்றும் மீனம் போன்ற ராசிகள் தங்கம் அணிந்தால் அது மிகவும் மங்களகரமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

தங்கத்தை புதிதாக அணியும் போது ஞாயிறு, புதன் அல்லது வெள்ளி போன்ற நாட்களில் அணிவது சிறப்பான நன்மைகளை கொடுக்கும் என நம்பப்படுகின்றது

காதில் தங்க நகைகள் அணிவதால் கேது கிரகம் வலுவாக அமையும். இதனால் உங்களுக்கு மேலும் தங்கம் வந்து குவியும். கடன் பிரச்சனைகள் அதிகமாக இருந்தால் மூக்கில் தங்கம் அணிந்துகொள்வது சிறப்பு என கூறப்படுகின்றது.

தங்கத்தை எங்கு எந்த நாளில் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்? | Where Which Day Wearing Gold Bring Good Results

இதன் காரணமாக கடன் பிரச்சனைகள் தொலைந்து பணம் அதிகமாக வந்து சேரும். வீட்டில் கணவன் மனைவிக் இடையே எப்போதும் சண்டை வருகிறது என்றால் தங்கத்தை கழுத்தில் அணிய வேண்டும்.

இதனால் கணவன் மனைவி இடையே தேவையற்ற சண்டைகள் விலகி பரஸ்பர அன்பை அதிகரிக்கவும், கணவன் மனைவி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

தங்கத்தை எங்கு எந்த நாளில் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்? | Where Which Day Wearing Gold Bring Good Results

உங்களுக்கு தொடர்ந்து பணத்திற்கு அதிக சிக்கல் இருந்தால் ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவது சிறந்தது. இதனால் பணப்பிரச்சனை விலகும் என்று கூறப்படுகின்றது.

பலர் விரல்களில் மோதிரங்களை அணிவார்கள். சிலருக்கு இது மிகவும் பிடிக்கும். ஆனால் 90 சதவீத மக்கள் தங்கள் ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவதில்லை. அத்தகையவர்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், அவர்களின் நிதி சிக்கல்கள் நீங்கும்.