இந்தியாவில் புதிதாக 53,370 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 78 இலட்சத்து 14 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 இலட்சத்து 16 ஆயிரத்து 46 ஆக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 89.78 வீதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 650பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1,17,956 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் மகாராஷ்ட்ராவில் 184 பேர், மேற்கு வங்கத்தில் 60பேர், சத்திஸ்கரில் 58பேர், கர்நாட்காவில் 51பேர், உ.பி.யில் 40பேர், தமிழகத்தில் 33பேர், டெல்லி மற்றும் கேரளாவில் தலா 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 6 இலட்சத்து 80 ஆயிரத்து 680 பேர், கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.