தமிழ்நாட்டில், நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

நவம்பர் 30ஆம் திகதி பல்வேறு புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ள முதலமைச்சர், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவை கட்டாயம் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள், வீட்டில் இருக்கும்போதும் பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சவர்க்காரம் போட்டு கை கழுவ வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அவசியத் தேவை இல்லாமல், வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.