பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இன்னொருவர் மீது குறிப்பிட்ட அளவுக்காவது நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம்.
ஏனெனில் நாம் பிறந்தது முதல் இறப்பு வரையில் சக மனிதர்களின் உதவி நிச்சயம் தேவைப்படுகின்றது. அப்படியிருக்கையில் சக மனிதர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டியதும் அவசியமாகிறது என்றால் மிகையாகாது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் யார் மீது நம்பிக்கை இருக்காதாம்
அப்படி தங்களின் வாழ்க்கை முழுவதும் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் போராடும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரம் மற்றும் மர்மமான தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களில் ரகசியம் காப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணங்களால் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீது கூட முழுமையாக நம்பிக்கை ஏற்படாதாம்.
இவர்களின் ரகசிய இயல்பு காரணமாக அவர்களை தங்களைப் பற்றி அதிக விஷயங்களை வெளிப்படுத்துவதிவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் யாரையும் நம்பி எதையும் பகிர்ந்துக்கொள்ள முடியாது என்ற எண்ணத்தில் வலுவாக இருப்பார்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் நேர்மை மற்றும் விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் வாழ்வில் அதிக ஏமாற்றங்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
அதனால் இவர்கள் வாழ்க்கையை எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றார்கள். இவர்களின் கடந்த கால அனுபவங்கள் காரணமாக ஒரு கட்டத்தில் யார் மீதும் நம்பிக்கை அற்றவர்களாக மாறிவிடுவார்கள்.
அவர்கள் மற்றவர்களிடம் மட்டுமன்றி தங்களின் வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தினர் மீது கூட முழுமையான நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விடவும் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவ கொடுப்பாரி்கள். இவர்களின் சுதந்திஜர மோகம் இவர்களை மற்றவர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாகவும் மாற்றிவிடுகின்றது.
தங்களின் சுதந்திரத்தை பறித்துவிடுவார்கள் என்ற பயம் அவர்களை அனைவரின் மீதும் அவநம்பிக்கை கொள்ள செய்கின்றது.
பெரும்பாலும் இவர்கள் உறவுகளைப் பற்றி அதிகமாக பகுப்பாய்வு செய்கின்றார்கள் இதனால், நம்பிக்கை வைக்க முடியாமல் வாழ்க்கை முழுதும் அச்சத்துடன் போராடிக்கொண்ருப்பார்கள்.