பொதுவாக, நமக்கு சலிப்பாக இருக்கும்போது கொட்டாவி விடுகிறோம் என்று சொல்வார்கள். ஆனால் அதைவிட முக்கியமாக, குளிர்காலத்தில் கொட்டாவி விடுவது குறைவு.

ஆனால், கோடை காலத்தில் கொட்டாவி விடுவது அதிகம். ஏனென்றால் கோடை காலத்தில் மூளை சூடாகிறது.

அதனால், நாம் கொட்டாவி விடும்போது உள்ளிழுக்கிற ஆக்சிஜன், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூளையைக் குளிர்விக்கிறது. ஆக, மூளை குளிர்ச்சி அடைவதற்காக கொட்டாவி ஏற்படுகிறது.

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது? | Why Others Yawn When We Yawn Life Style Tamil

நாம் மிகவும் சலிப்பாக இருக்கும்போது, அன்றைய தினம் நிறைய வேலை செய்து சோர்வாக இருக்கும்போது, நம் உடம்பு நம்மைத் தயார்படுத்த முயற்சிக்கிறது. இதன் மூலம் நம் மூளை கொடுக்கும் அறிகுறி வைத்து நமது உடல் செயற்படும். 

இந்த நேரத்தில் தான் நாம் வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விடுகிறோம். இதன்போது , முதலாவதாக நுரையீரல் விரிவடைகிறது, ரத்த ஓட்டம் அதிகரித்து அதிக ஆக்சிஜன் உள்ளே செல்கிறது.

2-வது, நம் முகத்தில் உள்ள தசைகள் விரிகின்றன. இது, நாம் சோர்வாகவோ அல்லது தூக்க கலக்கத்திலோ இருந்தாலும், நம்மை சுறுசுறுப்பாக மாற்ற உதவுகிறது.

எனவே நம் உடல் சோர்வாக இருக்கும் போது அதை சோர்வில்லாமல் செய்ய தான் இந்த கொட்டாவி வருகிறது என மருத்துவர்கள் ஆய்வு மூலம் கூறுகின்றனர்.

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது? | Why Others Yawn When We Yawn Life Style Tamil

நாம் கொட்டாவி விடும்போது அருகில் இருக்கும் மற்றொருவர் ஏன் கொட்டாவி விடுகிறார்? இது பலரிடமும் உள்ள ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கும் பதில் இருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சியில் தெரியவந்ததன் படி ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து யார் கொட்டாவி விடுகிறார்கள் என்று ஆராய்ந்தார்கள். அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது எல்லோரும் கொட்டாவி விடுவதில்லை.

ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே அடுத்தவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து கொட்டாவி விடுகிறார்கள். ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது நமக்கு கொட்டாவி வருவதற்கு முக்கிய காரணம் Mirror Neurons.

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது? | Why Others Yawn When We Yawn Life Style Tamil

இந்த Mirror Neurons நரம்பு அணுக்கள் நம் மூளையில் உள்ளன. இவை மற்றொரு நபரின் செயல்பாட்டை பார்க்கும்போது அதே செயலை செய்யும் திறன் கொண்டவை.

இதன் காரணமாக தான் ஒருவர் கொட்டாவி விடுவதை பார்க்கும்போது மூளையில் உள்ள Mirror Neurons செயல்பட்டு நமக்கும் கொட்டாவி விடத் தூண்டுகிறது. இது ஒரு வகையான Empathetic Response ஆகும்.