இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் கூட, சிறிய இடங்களிலும் வீட்டுத் தோட்டம் அமைத்து நம்மால் தேவையான காய்கறிகளை வளர்ப்பது சாத்தியம்.
அத்தகைய பயனுள்ள காய்கறிகளில் முக்கியமானது கத்தரிக்காய். இது சமைப்பதற்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகள் கொண்டது.
தண்ணீர் தேவை குறைவாகவும், பராமரிப்பு சுலபமாகவும் இருப்பதால், இது வீட்டு தோட்டத்திற்கு மிகவும் ஏற்றதொரு செடியாகும்.
ஆனால் இது என்ன தான் வளர்ச்சியில் முன்வரமாக இருந்தாலும் கத்தரிக்காய்கள் வருவது கடினம். எனவே இந்த பதிவில் எளிதில் காய்க்க கூடிய இயற்கை உரம் பற்றி பார்க்கலாம்.
கத்தரிக்காய் செடியை வீட்டில் வளர்க்க அதிகமான இடம் தேவையில்லை. கூடையின் தோட்டம் (Container Gardening) முறையிலும் வளர்த்துவிடலாம்.
சிறிய இடங்களில் கூட இந்த செடி நன்கு வளர்ந்து சிறந்த காய்களைத் தரக்கூடிய தன்மையுடன் இருக்கிறது. இப்படி நமது வசதிக்கு ஏற்ப செடியை நடும் போது அதன் வளர்ச்சி இப்படி தான் இருக்கும்.
சேதனப் பசளை
- முதற்கட்ட வளர்ச்சி (விதை மூடல் முதல் மெலிதான செடியாக வருவது வரை) – 7 முதல் 14 நாட்கள்
- முதன்மை வளர்ச்சி (செடி வளர்ந்து 6–8 இஞ்ச் உயரமாவது வரை) – 3 முதல் 4 வாரங்கள்
- மலர்ச்சி மற்றும் காய்கள் தோன்றும் கட்டம் – 6 முதல் 8 வாரங்கள்
- முதல் அறுவடைக்கு எடுத்துக்கொள்ளும் மொத்த நேரம் – 70 முதல் 90 நாட்கள் (சில ஜாதிகள் 60 நாளில் அறுவடைக்கு தயாராகலாம்)
மொத்தமாக, கத்தரிக்காய் விதைநட்டால் சுமார் 2.5 முதல் 3 மாதங்களில் முதல் காய்கள் அறுவடைக்கு வரும். ஆனால் சிறப்பான காலநிலை, மண் உரத்தன்மை, நீர்ப்பாசனம், மற்றும் பராமரிப்பு முறைகள் கையாள்வதுடன் இயற்கை முறை எரத்தாலும் கத்தரிக்காய் எளிதில் காய்க்கும்.
இதற்கு விளாம்பழ ஓட்டை இடித்து மாவாக்கி அதை கத்தரிஜக்காய் நடும் மண்ணுடன் கலந்து விதை நட வேண்டும்.
பின்னர் இந்த ஓட்டை மாவாக்கி அதை நீருடன் அளவாக கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தெளித்து வர வேண்டும். இப்படி செய்தால் 3 மாதங்களில் காய்க்க வேண்டிய கத்தரி செடி அதை விட விரைவாக காய்க்கும்.