ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த மாதம் மற்றும் ராசி அவர்களின் ஒட்டுமொத்த குணத்தையும் சொல்கின்றது. இதன்படி அவர்கள் எப்படிபட்டவர்கள் எப்படியானவர்கள் என்ன குணம் கொண்டவர்கள் என்பதை அறிய முடியுமாம்.
இந்த வகையில் சில மாதத்தில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே மன்னிக்கும் குணம் இருக்காதாம். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த துரோகங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் மற்றும் அதற்காக நிச்சயம் பழிவாங்குவார்கள்.
இது அவர்களை மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றும். அந்த மன்னிக்கும் குணம் இல்லாத ஆபத்தான நபர்கள் பிறந்த மாதம் என்னென்ன மாதம் என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

| ஜனவரி |
- ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களின் இதயத்தில் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காது. இவர்களுக்கு பிடிவாதமும் ஆளுமை குணமும் அதிகம்.
- இவர்கள் ஒருவரை கோபப்பட்டு வெறுத்து ஒதுக்கினால் அவர்களை ஒதுக்கியது தான். இன்னொரு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.
- மற்றவர்களின் தறறுகளை மறக்கவும் மன்னிகவும் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
- ஒருவரை பழிவாங்க நினைத்தால் திட்டம் போட்டு பக்காவாக பழிவாங்குவாங்குவார்கள்.
- அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையை இழந்தால், அதை மீண்டும் பெறுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
- எதிர்காலத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள மற்றவர்கள் தனக்கு செய்த துரோகத்தை மனதில் வைத்திருப்பார்கள்.
|
| அக்டோபர் |
- அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தீவிர உணர்ச்சியும், பழிவாங்கும் குணமும் கொண்ட ஆன்மாக்க என கூறப்படுகின்றது.
- நல்ல பாம்பு எப்படி பழிவாங்கும் என சொல்லப்படுகின்றதோ அதே போல தான் இம்மாதத்தில் பிறந்தவர்களும் பாம்பை போல சந்தர்பம் பார்த்து பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.
- மனதில் பல வருடங்கள் நடந்த சம்பவத்தை நினைவு வைத்து பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.
- மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், விசுவாசமாகவும் இருப்பதால், அவர்களால் நேசிப்பவர்களின் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத நபர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
- தனக்கு எவ்வளவு பிடித்த நபராயினும் தன்னை ஏமாற்றினால் ஒருபோதும் இரக்கம் காட்டாமல் பழிவாங்கியே தீருவார்கள்.
|
| ஆகஸ்ட் |
- ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் இரக்கமற்ற நபர்கள்.
- எந்த ஒரு பிரச்சனைக்கும் சாதாரணமாக இருக்க வேண்டியதற்கும் தீவிரமாய் சண்டை போட்டு அதை பழிவாங்கும் நோக்கத்துடன் பார்ப்பார்கள்.
- இந்த குணாதிசயங்கள் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் மனக்கிளர்ச்சி கொண்டவர்களாகவும், ஆக்ரோஷமானவர்களாகவும் இருப்பார்கள்.
- அவர்களிடம் மன்னிப்பு பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் அமைதியடையும் வரை காத்திருந்து, மனக்கசப்பு குறையும் என்று நம்புவது நல்லது. ஆனால் பெரும்பாலும் அது சாத்தியமற்றது.
|