ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் காதல் வாழ்க்கையில் அதீத மகிழ்ச்சியை அனுவக்கும் அதிர்ஷ்ட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி காதல் வாழ்க்கையில் மறக்க முடியாத நல்ல அனுபவங்களை பரிசாக பெரும் யோகம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
அன்பு மற்றும் காதலின் கிரகமாக திகழும் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிப் பெண்கள் இயல்பாகவே காதல் மற்றும் திருமணத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் ஒருவரை தங்களின் வாழ்க்கை துணையென முடிவு செய்த பின்னர் அவர்களுக்காக எதையும் செய்ய தயாராகிவிடுவார்களாம். இவர்களின் இந்த குணத்தால் இவர்களின் காதல் வாழ்க்கை இனிமையான அனுபவங்களை கொண்டதாக இருக்கும்.
காதலில் இவர்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டம் காரணமாகவும் சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாகவும் இந்த ராசி பெண்கள் காதலில் அதிக மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.
கடகம்
கடக ராசி பெண்கள் இயற்கையாகவே உறவுகள் மீது மிகுந்த அன்பு மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
சந்திரனால் ஆளப்படுவதால், இந்த ராசி பெண்கள் காதலில் அதிக ரொமாண்டிக்காக நடந்துக்கொள்வார்கள். துணையின் ஆசைகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
இவர்கள் தங்களை தனது துணை காதல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி துணைக்கு காதலை கொடுப்பதால், இந்த ராசி பெண்களின் காதல் வாழ்க்கை இறுதி வரையில் மகிழ்ச்சியை கொடுக்கும்.
துலாம்
ரிஷப ராசி பெண்களை போல் துலாம் ராசிப் பெண்களும் சுக்கரனால் ஆளப்படுவதால், காதல் மற்றும் திருமண வாழ்க்கை மீது அதீத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் வாழ்க்கை துணைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த தனித்துவமான குணங்கள் மற்றும் வசீகரிக்கும் அழகு காரணமாக இவர்கள் அளவற்ற காதலை வாழ்க்கை முழுதும் பெரும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
