ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்பபைடையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்டுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதீத பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் ஒரு விடயத்தை அடைய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள் என்றால், நிச்சயம் அதனை அடையும் வரையில் அயராது பாடுபடுபவர்களாக இருப்பார்கள். அப்படி பிடிவாதத்தின் மறு உறுவமாகவே திகழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாதமானவர்களாக கிரீடத்தை ஏற்றுக்கொள்ளும் ராசியாக அறியப்படுகின்றார்கள்.இவர்கள் இயல்பிலேயே உண்மைக்கும் , நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கெண்டவர்களாக இருப்பார்களாம். நினைத்ததை அடையும் வரையில் அடக்காத பிடிவாத குணமும் இவர்களிடம் இருக்கும்.
பிறவியிலேயே அதீத தன்னம்பிக்கை மற்றும், தைரியத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருக்கும் இவர்கள். தங்களின் முடிவுகளை யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்களாம்.
சிம்மம்

அனைத்து கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரிய பகவானால், ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் என்போதும் மற்றவர்களை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள், மேலும் அவற்றைப் பாதுகாக்க பயப்படுவதில்லை, இவர்கள் தங்கள் இலக்குகளை தெளிவாக நிர்ணயம் செய்த பின்னரே காரியத்தில் இறங்குவார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவரின் கவனமும் நிச்சயம் இவர்களின் மீது தான் இருக்கும்.இவர்கள் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
விருச்சிகம்

மர்மமான குணத்துக்கும் தீவிரத்தன்மைக்கும் பெயர் பெற்ற விருச்சிக ராசிக்காரர்கள், ஒரு முடிவை எடுத்தவுடன் எளிதில் அசைய மாட்டார்கள்.
அவர்களின் பிடிவாதம் அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகள் மற்றும் வலுவான நம்பிக்கைகளிலிருந்து வருகிறது.அதனால் இவர்கள் நினைத்ததை அடைய எத்தனை தடைகள் வந்தாலும் அசால்ட்டாக கடந்துவிடுவார்கள்.
ஒரு விருச்சிக ராசி பெண் தங்கள் மனதை ஏதாவது ஒன்றில் நிலைநிறுத்தும்போது, அவர்கள் அதை அசைக்க முடியாத உறுதியுடன் பின்தொடர்கிறார்கள்.இவர்களின் இந்த பிடிவாத குணம் இவர்களின் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றது.
