ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் மிகுந்த பொறுப்புணர்வு கொண்ட மருமகளாகவும், சிறந்த மனைவியாகவும் இருப்பார்களாம்.

அப்படி புகுந்த வீட்டில் அனைத்து உறவுகளையும் மதித்து நடந்து வீட்டையே மகிழ்சியாக வைத்துக்கொள்ளும் தலைசிறந்த மருமகள்கள் எந்த ராசியினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே புத்திக்கூர்மை வாய்ந்தவர்களாகவும், செய்யும் ஒவ்வொரு செயலிலும் முழுமையையும் நேர்த்தியையும் விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் கணவருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இவர்களின் அந்த குணம் புகுந்த வீட்டின் அனைத்து உறவுகளையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.
இவர்களின் எதார்த்தமான அணுகுமுறை காரணமாக மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் தங்களுக்கு தேவையானதை சாதிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி பெண்கள் இயல்பிலேயே அக்கறை மற்றும் இரக்க குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் மற்றவர்களின் மனநிலையை சொல்லாமலேயே புரிந்து நடந்துக்கொள்ளக்கூடிய ஆற்றலை பிறப்பிலேயே பெற்றிருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்கு மாத்திரமன்றி மொத்த குடும்பத்துக்கும் பிடித்தமான நபராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் கலையை நன்று அறிந்தவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் விசுவாசத்துக்கும் நேர்மையான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் விருப்பத்தையும், மகிழ்ச்சியையும் விட குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்களின் இந்த தனித்துவமான குணங்கள் இவர்களை சிறந்த மகளாக மட்டுமன்றி திருமணத்தின் பின்னர் சிறந்த மருமகளாகவும் மாற்றுகின்றது.
