ஜோதிட சாஸ்தஜரத்தின் அடிப்படையில் கிரக பெயர்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்ங்களை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு  நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி சூரியன் விருச்சிக ராசிக்கு இடமாற்றம் அடைந்து, சூரியன், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகங்களைக் கொண்ட ராஜயோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்! இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி | 3 Zodic Get Rich Due To Sevvai Budhan Conjunction

அதே சமயத்தில், செவ்வாய்க்கும் சூரியனுக்கும் இடையில் மங்கல்தித்ய ராஜயோகமும், சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் புதாதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது. குறித்த அபூர்வ ராஜயோகங்களால், 3 ராசியினர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றது. 

அப்படி வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களையும் நிதி ஆதாயத்தையும் அனுபவிக்க போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்

ஒரே நேரத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்! இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி | 3 Zodic Get Rich Due To Sevvai Budhan Conjunction

உருவாகியுள்ள இந்த யோகங்களால் துலாம் ராசியினரின் வாழ்க்கையில் எதிர்பாரத அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். இவர்கள் வாழ்வில் நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போகின்றது.

துலா  ராசியின் பத்தாவது வீட்டில், குரு மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கியுள்ளதுடன், இரண்டாவது வீட்டில் திரிகிரஹி ராஜயோகமும் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பார்வையும் வலுவாக இருப்பதால், தங்கம், வெள்ளி வாங்குவதற்கான யோகம் அமையும்.

செவ்வாய், சூரியன் மற்றும் புதன் ஒன்றாக வருவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதுவரையில் தாமதமாகிக்கொண்டிருந்த விடயங்களை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். 

பல வழிகளில் இருந்தும் வருமானம் அதிகரிப்பதற்காக வாய்ப்புகள் உருவாகும். இதனால் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்ப்படப்போகின்றது. 

விருச்சிகம்

ஒரே நேரத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்! இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி | 3 Zodic Get Rich Due To Sevvai Budhan Conjunction

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகங்களால் பல்வேறு வகையிலும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றது. 

சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் ராஜயோகம் காரணமாக, விருச்சிக ராசியினரின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நிதி ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

குடும்பத்திலும் சரி , பணியிடத்திலும் சரி இதுவரையில் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நிலவும். 

மிதுனம்

ஒரே நேரத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்! இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி | 3 Zodic Get Rich Due To Sevvai Budhan Conjunction

செவ்வாய், புதன் மற்றும் சூரியன் இணைவதால் மிதுன ராசியினர் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகின்றார்கள். 

திருமணத்துக்காக காத்திருப்போருக்கு நல்ல வரன் அமையும், அது போல் மனத்துக்கு பிடித்த வேலையை செய்வதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். 

குறித்த ராஜ யோகங்களால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் மூலமோ, நண்பர்கள் மூலமோ மகிழ்ச்சி செய்தி கிடைப்பமதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. மொத்தத்தில் இந்த மூன்று ராசிகளுக்கும் வாழ்வில் நினைத்த காரியம் எல்லாம் நடக்கப்போகின்றது.