ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல், விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுட்டு வருகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறவர்களால் தங்களின் வெற்றியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவும், மற்றவர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இவர்கள் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாக நடந்துக்கொள்வார்கள்.

அப்படி மற்றவர்களின் வெற்றியை பார்த்து, அதிகமாக பொறாமை கொள்ளும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மர்ம்மான குணத்துக்கும், அவர்களின் தீவிர ஆளுமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்களாக இருப்பார்கள். ஆனால் தங்களின் இலக்குகளின் மீது கழுகு பார்வை கொண்டவர்கள். யாருக்காகவும் தங்களின் வெற்றியை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் மற்றவர்களிடமிருந்தும் அதே உழைப்பை எதிர்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் மிகப்பெரிய எதிர்மறை குணம் என்னவென்றால் இவர்களால் மற்றவர்களின் வெற்றியை சகித்துக்கொள்ளவே முடியாது.
சிம்மம்

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எப்போதும் உச்சத்தில் இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் வலுவாக இருப்பதால், மற்றவர்கள் பிரகாசிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
அவர்களுக்கு கீழ் தான் மற்றவர்க்ள இருக்க வேண்டும் என்ற குணம் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும். அதனால் மற்றவர்களின் வெற்றியை பொறுத்துக்கொள்ளவே மாட்டார்கள்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் உலகமே ஒரு விடயத்துக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தாலும், தங்களின் தனிப்பட்ட கருத்துக்கும், இலக்குக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் உற்சாகமும், சுறுசுறுப்பும் கொண்டவர்களாக இருந்தாலும், மற்றவர்கள் தங்களை விட வேகமாகவோ அல்லது எளிதாகவோ வெற்றிபெறும்போது அதனை பொறுத்துக்கொள்ளவே முடியாமல் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகுவார்கள்.
இவர்களிடம் அதிக ஈகோ இருப்பதால், மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து அவர்களால் பொறாமை படாமல் இருக்கவே முடியாது.
