தற்போது இருக்கும் அவசர உலகில் உண்மை, நேர்மை, நீதி, நியாயம் போன்றவற்றிற்கு எல்லாம் இடம் கிடையாது.
சமூகத்தில் நேர்மையானவர்களையும் நம்பிக்கையானவர்களையும் பார்ப்பதே அரிதாகி விட்டது.
நேர்மையானதொரு வாழ்க்கை வாழ்வதற்கான சூழல் நாளாக நாளாக குறைந்த வருகிறது.
இப்படி இருக்கும் சமயத்தில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மாத்திரம் நிஜ வாழ்கையிலும் அரிசந்திரன்களாக இருப்பார்களாம்.
அந்த வகையில், ஜோதிட சாஸ்த்திரங்களில் கூறப்பட்டது போன்று ராசிகளின் குணங்கள் அடிப்படையில் உண்மையை நிலைநாட்ட போராடும் ராசியில் பிறந்தவர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

| தனுசு ராசியினர் | குருபகவன் ஆட்சிச் செய்யும் தனுசு ராசிக்காரர்கள் வெளிப்படையாக இருக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நேர்மையாக வாழ்வதை அவர்களின் கொள்கையாக வைத்திருப்பார்கள். இவர்களிடம் வம்பு வைத்துக் கொள்ளும் பொழுது உங்களின் ரகசியங்கள் அனைத்தும் வெளியில் வர வாய்ப்பு உள்ளது. |
| மேஷ ராசியினர் | செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் துணிச்சல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். உண்மைகளை மறைப்பது இவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும். நேர்மையை மதிக்கும் இவர்களிடம் பிரச்சினை வைத்துக் கொள்வது உங்களுக்கே பிரச்சினையாகி விடும். நேர்மையானவர்களாக இருப்பதை அவர்களின் பலமாக பார்க்கிறார்கள். |
| கன்னி ராசியில் பிறந்தவர்கள் | இளவரசன் என செல்லமாக அழைக்கப்படும் புதனால் ஆளப்படும் கன்னி ராசியினர் பகுப்பாய்வு செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொறுப்புள்ளவர்களாக இருந்து குடும்பத்தையே பார்த்துக் கொள்வார்கள். சில விடயங்களில் கூர்மையான கவனிப்பு வைத்திருப்பார்கள். தவறுகளை அதிகமாக பார்க்கும் இயல்பு இவர்களிடம் இருக்கும். |
