சமீபக் காலமாக உலக நாடுகளை உலுக்கிய அழிவுகள் அதிகரித்து வருகிறது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மண்சரிவு, புயல், வெள்ளம் ஆகிய அனர்த்தங்கள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உடை, உணவு ஆகியவற்றில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வரிசையில், அறிவுப்பூர்வமான மக்கள் அதிகம் வாழும் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. தற்போது ஜப்பானிய ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை பாபா வாங்கா அவருடைய கணிப்பில் தெளிவாக கூறியுள்ளார்
பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கா உலகில் அடுத்தடுத்து நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து அவருடைய கணிப்பில் கூறிச் சென்றுள்ளார். அவர் கூறியது போன்று அனர்த்தங்களும் மக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது.
அவரின் கணப்பின்படி, மிகப் பெரிய சுனாமி அலையொன்று மக்களை தாக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், பாபா வாங்கா கணிப்பில் கூறியது போன்று அடுத்து சுனாமி வரும் என மக்கள் நம்புகிறார்கள். இதன் பாதிப்பு என்னென்ன நாடுகளுக்கு இருக்கும் என்றும், மக்கள் இதனால் எவ்வளவு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கப்போகிறார்கள் என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஜப்பானில் பாபா வாங்கா கூறியது போன்று சுனாமி தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக அழிவை பார்த்து பயந்து போன மக்களுக்கு பாபா வாங்கா, ரியோ டாட்சுகி, "தி ஃபியூச்சர் தட் ஐ சா" என்ற புத்தகத்தில் விளக்கமாக கூறியுள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஏகப்பட்ட அழிவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது. உலக அழிவுகளுக்கு பின்னர் ஒரு கொடிய நோய் மக்களை தாக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 என்னும் மர்மமான வைரஸ் ஒன்று மில்லியன் கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் பெரிய சுனாமியின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்பட்டது.
பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்ட போன்று இதுவரையில் பெரியளவில் பாதிப்பு இல்லை. அடுத்த 2-3 நாட்களுக்கு பூகம்பம் வர வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. இதனால் சுனாமி வந்துவிடுமோ என்ற பயம் கிளம்பியுள்ளது.
தற்போது ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, பசிபிக் கடலோரப் பகுதிகளில் 20-70 சென்டிமீட்டர் வரை சுனாமி அலையின் தாக்கம் இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

