சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வாரத்தில் நான்கு முறை இந்த சரும பராமரிப்பை பின்பற்றினால் போதும்.
எல்லோரும் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இதற்காக பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள் ஆனால எவ்வளவு பணம் செலவு செய்தாலும் முகத்தின் பொலிவு நிரந்தரமில்லாதது.
அந்த நேரத்தில் நாம் இயற்கை சரும பராமரிப்பை பின்பற்றுவது மிகவும் முக்கியம். இந்த செய்முறை இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமல்லாமல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.
பண்டைய காலங்களி உப்தானைக் கொண்டு மசாஜ் செய்வார்கள். இந்த செய்முறை சருமத்திற்கு மிகவும் நன்மை தரும். இந்த சரும பராமரிப்பு உப்தானை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

உப்தான் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பல நூற்றாண்டுகளாக நமது பண்டைய மரபுகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
பண்டைய காலங்களில், சோப்புகள் மற்றும் கிரீம்கள் கிடைக்காதபோது, இந்த பேஸ்ட் சரும பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டது.
இது உடலில் காய்ந்தவுடன், இறந்த சருமத்தை நீக்கி, சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். இந்த பேஸ்ட்டின் மிக முக்கியமாக இருப்பது இந்த உப்தான் பயன்படுத்துவதால் எந்த சரும பாதிப்பும் வராது.

சரும பராமரிப்பிற்காக பயன்படும் உப்தான் மஞ்சள், கடலை மாவு, சந்தனம், பால், குங்குமப்பூ போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றது.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் சிறிது கடுகு எண்ணெயைச் சேர்த்து ஒரு பேஸ்ட் உருவாக்கவும். இந்த விழுதை உங்கள் உடல் முழுவதும் தடவி சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் காய்ந்ததும், குளிக்கவும்.

நன்மைகள் - கடுகு விதைகளில் வைட்டமின்கள் ஈ, கே மற்றும் டி ஆகியவை உள்ளன, அவை சருமத்தை உள்ளிருந்து வலுப்படுத்தி, பளபளப்பாக வைத்து, பழுப்பு நிறத்தை நீக்க உதவுகின்றன.
கடுகு ஸ்க்ரப்பில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை சருமத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
