பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருமே தங்களின் கருத்துக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், தங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவது இயல்பான விடயம் தான். ஆனால் எல்லோருக்கும் அவ்வாறு மதிப்பளிக்கப்படுவது கிடையாது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்வர்களால் அதிகம் மதிக்கப்படும் நபர்களாக இருப்பார்கள்.

அப்படி 12 ராசிகளில் மற்றவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமாக இருக்கும் முக்கிய 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசி இயற்கையாகவே மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ராசிகளில் ஒன்றாக திகழ்கின்றது. இந்த ராசியினர் பிறப்பிலேயே சிறந்த தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பேர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் இவர்கள் தைரியமான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல் மற்றவர்களை கட்டுப்படுத்தும் தொணியுடன் கம்பீரமாக இருக்கும்.
கடினமாக சூழ்நிலைகளையும் மிகவும் நிதானத்துடனும், பெறுமையுடனும் கடப்பதால் இவர்கள் மீது மற்றவர்களுக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுகின்றது. இறப்பின் பின்னரும் மற்றவர்களால் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் இயற்கையாகவே ஒரு ஆதிக்க ராசியாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருப்பார்கள்.
இவர்கள் தலைமை தாங்கவே பிறப்பெடுத்தவர்கள் என்பதால், இவர்களிடம் மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை இயல்பிலேயே இருக்கும்.
இவர்கள் முதல் பார்வையிலேயே மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்களாகவும் தனித்துவமான நடத்தை கொண்டவர்களாகவும் இருப்பதால் மற்றவர்களால் எப்போதும் மதிக்கப்படுகின்றார்கள்.
மகரம்

ஒழுக்கம் மற்றும் நீதியின் கிரகமான சனியால் ஆளப்படும் மகர ராசியினர் சொன்ன சொல்லுக்காக உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் எல்லாவற்றுக்கு மேலாக நேர்மைக்கும், உண்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
அவர்கள் தங்களின் எதார்த்த அணுகுமுறை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவற்றின் மூலம் மரியாதையைப் பெறுகிறார்கள்.
