சில பொதுவான தவறுகள், குறிப்பாக சிக்கனை சமைக்கும்போது, ​​பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்து உணவு விஷம், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால்தான் சிக்கனை இந்த முறையில் சமைக்கக்கூடாது.

நம் தினசரி உணவில் சிக்கன் பலரின் விருப்பமான உணவாக இருக்கிறது. ஆனால் சிக்கனை எவ்வாறு கையாளுகிறோம், சமைக்கிறோம் என்பதே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. சிறிய கவனக்குறைவு கூட கடுமையான உடல்நல பிரச்சனைகளாக மாறும். 

சிக்கனை சமைக்கும் போது செய்யப்படும் சில பொதுவான தவறுகள், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைய காரணமாகின்றன.

இதனால் உணவு விஷம், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே சிக்கனை சமைக்கும் சரியான முறைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

சிக்கனை கழுவினால் விஷமாக மாறுமா? விளக்கம் இதோ | If Cook Chicken Like This Will Become Poisonous

பலர் சிக்கனை சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் நன்கு கழுவுவார்கள். அது அதை சுத்தம் செய்யும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இது தவறு என கூறுகிறார்கள்.

கோழியில் உள்ள சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தண்ணீரில் கழுவுவதன் மூலம் முழுமையாக அழியாதாம்.

அதை கழுவும் தண்ணீர் தெறித்து சமையலறை முழுவதும் பரவி, சிங்க், கவுண்டர், கத்திகள் மற்றும் பாத்திரங்களில் விழும்.இதனால் மற்ற உணவுகள் சமைக்கும் போது அது மற்ற உணவுகளையும் பாதிக்கும். 

இதனால் தான் உணவு விஷமாக மாறும் என கூறுவார்கள். சிலர் கோழியை குறைவாகவோ அல்லது பாதியாகவோ சமைக்கிறார்கள். சிலர் வெளியே நன்றாக சமைத்து உள்ளே பச்சையாக சாப்பிடுகிறார்கள். 

சிக்கனை கழுவினால் விஷமாக மாறுமா? விளக்கம் இதோ | If Cook Chicken Like This Will Become Poisonous

இது மிகவும் ஆபத்தானது. சிக்கனை முழுமையாக சமைக்கவில்லை என்றால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் கொல்லப்படாது. இதனால் சாப்பிட்ட உடனேயே அல்லது சில மணிநேரங்களுக்குப் பிறகு வயிற்றுப் பிரச்சினைகள் ஆரம்பிக்கும். 

சிக்கனை உள்ளேயும் வெளியேயும் நன்றாக சமைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும். இறைச்சி சிவப்பாகவோ அல்லது பச்சையாகவோ இருந்தால் அது ஆபத்தை மட்டுமே தரும். 

சிக்கனை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்தவுடன் சமைக்காமல் நீண்ட நேரம் வெளியே வைப்பதும் ஆபத்தானது. வெப்பமான காலநிலையில் பாக்டீரியாக்கள் மிக விரைவாக வளரும். 

சிக்கனை கழுவினால் விஷமாக மாறுமா? விளக்கம் இதோ | If Cook Chicken Like This Will Become Poisonous

சிக்கனை சமைக்கும் போது பயன்படுத்தப்படும் கத்தி, பலகை மற்றும் பாத்திரங்களை உடனடியாக வெந்நீர் மற்றும் சோப்புடன் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதே கத்தியால் காய்கறிகளை வெட்டுவது மிகவும் ஆபத்தானது.

கைகளையும் சோப்புடன் நன்கு கழுவ வேண்டும். இந்த சிறிய முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால், பாக்டீரியாக்கள் உடலில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது.மீதமுள்ள சிக்கனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதும் நல்லதல்ல. ஒரு முறை மட்டுமே சூடாக்கி சாப்பிடுவது நல்லது.