ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் நிலை மற்றும் சேர்க்கையானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டிருக்கும் என தொன்று தொற்று நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் எதிர்வரும் பொங்கல் தினத்தில், சுக்கிரனும் சூரியனும் மகர ராசியில் இணைவதால், மங்களகரமான சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறது.

அழகு மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியாக சுக்கிரனும், தலைமைப்பண்பு மற்றும் தன்னம்பிக்கையின் கிரகமான சூரியனும் இணைவதால்,அது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்பாராத நன்மைகளை ஏற்படுத்தப்போகின்றது.
அப்படி சுக்ராதித்ய யோகத்தால், பேரதிஷ்டத்தை அனுபவிக்கப்போகும் முக்கிய 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் இந்த யோகமானது அவர்களின் கர்ம ஸ்தானத்தில் உருவாகிறது, அதனால் இவர்கள் தொழில் வாழ்க்கையில் இதுவரையில் இல்லாத முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.
புதிய தொழில் முயற்சியில் இருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கூடிவரும். இவர்கள் இருக்கும் இடத்திலேயே வருமானத்தை பெருக்கிக்கொள்ளக்கூடிய அதிஷ்டம் கிடைக்கும்.
எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பொருளாதா உதவிகள் எளிதில் வந்துசேரும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அபரிமிதமான வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் அள்ளி கொடுக்கப்போகின்றது. இவர்களுக்கு இந்த காலகட்டம் பணவரவை நிச்சயம் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மாற்றம் ஏற்படும். கடந்த கால கடன் பிரச்சினைகளுக்கு இந்த பொங்கல் தினத்துக்கு பின்னர் முடிவு கட்டுவீர்கள்.
புதிய தொழில் தொடங்கவேண்டும் என நீண்ட காலமாக பேராடி வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் நிதி வளமும் தானாகவே அமையும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, சுக்ராதித்ய யோகம் செல்வ ஸ்தானத்தில் உருவாகிறமை பெரும் அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக்கொடுக்கப்போகின்றது.
இதனால் அவர்களின் நிதிநிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும்.அவர்களின் கடந்த கால முதலீடுகள் இப்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
பணியிடத்தில் அவர்களின் திறமையை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் தானாக அமையும். அதனால் பதவியுயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சூரியனின் ஆசியால் நிச்சயம் உயர் பதவியும் சுக்கிரகின் ஆசியால் பெரியனவில் நிதியும் கிடைக்கும்.
