எல்லோரது வாழ்க்கையிலும் அவர்களின் இன்ப துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு காதல் உறவு நிச்சயம் வேண்டும். அது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்,துரதிஷ்டமாகவும் இருக்கலாம். 

துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு இது எவ்வளவு வயதானாலும் அமையாது. ஜோதிடம் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் பிறந்த ராசி, நேரம் மற்றும் நட்சத்திரம் போன்றவை உதவுகின்றது. 

ஜோதிடம் போலவே எண் கணிதமும் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை அறிய உதவும். ஆனால் இது அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் தான் அமையும். 

எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்கள் காதல் விவகாரங்களில் துரதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் இறுதிவரைக்கும் கூட தனியாக இருப்பார்களாம். அவர்களில் சிலரை இந்த பகுதியில் பார்க்கலாம்.

இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் எப்பவும் சிங்கிள் தான் - ஏன் தெரியுமா? | People Born On These 4 Dates Are Always Single

  1-ஆம் தேதி பிறந்தவர்கள் அனைத்து மாதத்திலும்

  • 1 ஆம் தேதியில் பிறந்தவர்கள் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும். இவர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் எப்போதும் தங்களைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்வார்களாம். தன்னம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் விளங்குகிறார்கள்.
  • தங்கள் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள் இவர்கள். உயர்ந்த இலட்சியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • தங்கள் வாழ்க்கையில், தன்னுடைய வேகத்தைக் குறைக்கும் அல்லது தங்கள் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் துணைகளை விட்டு விலகுவதே இவர்களின் குணம். 
  • அவர்கள் எப்போதும் பாராட்டி, ஊக்குவிக்கும் ஒருவரை அவர்கள் துணையாக பெறும் வரை சிங்கிளாக இருப்பார்கள்.

16 ஆம் தேதி பிறந்தவர்கள்

  • தொலைநோக்குப் பார்வையும் ஆன்மீக ஆர்வமும் கொண்டவர்கள், நெப்டியூன் தலையில் பிறந்தவர்களை ஆளும். இவர்கள் காதலுக்கு அதிக நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • ஆனால் வெளிப்படையாக தெரியாமல், தங்களைப் பாதுகாத்து தனிமையை விரும்புவார்கள். ஒருவர் மீது காதல் கொண்டாலும், உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கனவிலேயே காலத்தை கழிப்பார்கள்.
  • ஆகவே, உண்மையான புரிதலையும் இணைப்பையும் காணும் வரை, எத்தனை வருடமாக இருந்தாலும் சிங்கிளாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம்.

அனைத்து மாதத்திலும் 27 ஆம் தேதி பிறந்தவர்கள்

  • இந்த பிறந்த தேதி செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தில் உள்ளது. இவர்கள் தோழமை மற்றும் நட்பை விரும்புகிறார்கள். ஆனால் கனவு துணையை அடையும் வரை யாருடனும் காதல் உறவில் ஈடுபட விரும்ப மாட்டார்கள்.
  • அதிக எதிர்பார்ப்புகள், சாதிக்கும் மனப்பான்மை கொண்டதால் தங்கள் வேகத்திற்கு பொருந்தாதவர்களை காதலிக்க மாட்டார்கள். உறவுகளைத் துண்டிக்கவும் தயங்க மாட்டார்கள்.
  • சிலருக்கு இது கடுமையாக தோன்றலாம். ஆனால் சரியான நபரை கண்டுபோது, இவர்கள் பாதுகாவலர், ஊக்கமளிப்பவர் மற்றும் நம்பிக்கைக்குரியவராக மாறுவர்.

31 ஆம் தேதி பிறந்தவர்கள்

  • மாதம் எதுவும் வந்தாலும் 31 ஆம் தேதியில் பிறந்தவர்கள் வழக்கத்திற்கு மாறான பாதையில் பயணிக்க மகிழ்ச்சியடைகிறார்கள். வயது அதிகரிக்கும் போதெல்லாம் இது மேலும் வலுப்படுகிறது.
  • பாரம்பரிய விதிமுறைகளை மாற்றி உருவாக்கும் இவர்கள், காதல் வாழ்க்கையிலும் அதே விதத்தில் நடக்கிறார்கள்.
  • எதிர்கால இலக்கங்களுக்கு பொருத்தமான, கனவுகளை ஊக்கப்படுத்தும் ஒருவரை தேடுவர். அதனால் காதலில் அவசரப்படாமல் மெதுவாக பழகி, உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.