மைனா நந்தினி 5 மாதங்களில் 13 கிலோ குறைத்தது எப்படி என்பதற்கான சீக்ரெட்டை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

5 மாதங்களில் 13 கிலோ எடை குறைப்பு - இது தானா மைனா நந்தினியின் சீக்ரெட்? | Myna Nandini S Secret 13 Kg Weight Loss 5 Months

 மைனா நந்தினி

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமான நகைச்சுவை நடிகை, தான் மைனா நந்தினி. இவர் வி. ஜேவாக இருந்து பின்னர் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். 

பல தமிழ் திரைப்படங்களில் கலந்துகொண்ட அவர் பின்னர் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டார்.

தற்போது மைனா நந்தினியும் அவரது கணவரும் சேர்ந்து ‘பொண்ணூஞ்சல்’ என்ற பெயரில் இன்ஸ்டாவில் புடவை விற்பனை செய்து வருகின்றனர். 

5 மாதங்களில் 13 கிலோ எடை குறைப்பு - இது தானா மைனா நந்தினியின் சீக்ரெட்? | Myna Nandini S Secret 13 Kg Weight Loss 5 Months

இந்நிலையில் நந்தினியும் அவருடைய கணவர் யோகேஷும் இணைந்து சுமார் 5 மாதங்களில் 13 மற்றும் 20 கிலோ வரை எடை குறைத்துள்ளனர். யோகேஷ் 90 கிலோவில் இருந்து 70 கிலோவிற்கும், நந்தினி 75 கிலோவிலிருந்து 62 கிலோவிற்கும் எடை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த எடை குறைப்ப பயணத்திற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதை விரிவாக பார்க்கலாம். 

5 மாதங்களில் 13 கிலோ எடை குறைப்பு - இது தானா மைனா நந்தினியின் சீக்ரெட்? | Myna Nandini S Secret 13 Kg Weight Loss 5 Months

மைனா நந்தினியின் சீக்ரெட்

இந்த நிலையில் மைனா நந்தினி சீக்ரட் பத்தி கூறும் போது அவர் காலையில் உழுந்த முதல் வேலையாக ஒரு டம்லர் தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளாராம். 

இது கலோரிகளை எரித்து குடலை சுத்தப்படுத்தி உடலின் நச்சுக்களை வெளியேற்றும். 

இதைத் தொடர்ந்து 15 – 20 நிமிடங்கள் கழித்து அவர் திட்டமிட்ட யோகா பயிற்ச்சியை செய்வாராம். இதன்போது கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்ச்சி செய்தால் உடலில் தேவையில்லாமல் சேர்ந்த கெட்ட கொழுப்பு கரையும் என்று மைனா நந்தினி கூறுகிறார். இது வேகமான எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.

5 மாதங்களில் 13 கிலோ எடை குறைப்பு - இது தானா மைனா நந்தினியின் சீக்ரெட்? | Myna Nandini S Secret 13 Kg Weight Loss 5 Months

காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஆப்பிள் சைடர் வினிகர்  குடிக்கும் வழக்கத்தை வைத்துள்ளார் மைனா நந்தினி.  இது வயிறு நிறைந்த உணர்வு கொடுப்பதால் அதிகமாக சாப்பிடுவது தடைபடும். 

பின்னர் காலை உணவாக நன்கு மசித்த வாழைப்பழம், நிபுணர் பரிந்துரைத்த புரோட்டீன் பவுடர், கூடவே முட்டையின் வெள்ளைப்பகுதி ஆகியவற்றை கலந்து தோசை போல ஊற்றி சாப்பிட்டு வந்தாராம் மைனா நந்தினி. 

மதிய உணவிற்கு எண்ணெய் சேர்க்காமல், ஏர்-ஃப்ரையர் மூலம் மீன் வறுவல் (தேவைப்பட்டால் ஆலிவ் ஆயில்), 3 முட்டையின் வெள்ளைக்கரு, 1 முட்டையின் மஞ்சள் கரு, 200 கிராம் அரிசி சாதம், 100 கிராம் ஆப்பிள் போல ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை சாப்பிடுவாராம்.

5 மாதங்களில் 13 கிலோ எடை குறைப்பு - இது தானா மைனா நந்தினியின் சீக்ரெட்? | Myna Nandini S Secret 13 Kg Weight Loss 5 Months

மற்றும் இரவு உணவை 7 – 8 மணிக்குள் சாப்பிட்டு விடுவாராம். இனி இரவு உணவிற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, 200 கிராம் மீன், 2 முட்டை வெள்ளைக்கரு என சாப்பிடுவதாக மைனா நந்தினி கூறி உள்ளார். 

மேலே கூறப்பட்ட விடயங்கள் மைனா நந்தினி நிபுணர்கள் மூலம் பின்பற்றி டயட் பிளான் என்பது குறிப்பிடத்தக்கது. 

டயட் பிளான் மேற்கொள்ள இருப்பவர்கள் உங்களுக்கு உடலில் வெவ்வேறு பிரச்சனைகள் இருக்கும். அதனால் மருத்துவரிடம் ஆலாசனை கேட்ட பின்னர் நீங்கள் டயட் பிளான் இருக்கலாம். 

மிக முக்கியமாக ஆப்பில் சைடர் வினிகரை மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் குடிப்பது மிகுந்த நன்மை தரும்.