இலங்கையில் பிரபலமாக உண்ணப்படும் ஆப்பத்திற்கு எப்படி அரிசி மாவு அரைப்பது என்பதை பார்க்கலாம்.

ஆப்பம் ரெசிபி
பொதுவாக வீட்டில் காலை உணவாக இட்லி தோசை இடியப்பம் பொங்கல் போன்ற உவுகள் செய்வார்கள். இவை அனைத்தும் சுவையாக இருந்தாலும் ஆப்பம் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆனால் சுவையான ஆப்பத்திற்கு எப்படி மாவு அரைக்க வேண்டும என்பது பலருக்கும் தெரியாது. இதற்காக பலரும் கடைகளில் தான் மாவை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அந்த மாவில் பொதுவாக என்னென்ன கலந்திருப்பார்கள் என்பது தெரியாது. இது ஆராக்கியமானதும் இல்லை. இதற்காக ஆப்பத்திற்கு மாவு எப்படி அரைக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி – ஒரு கப்
- பச்சை அரிசி – 2 கப்
- துருவிய தேங்காய் – ஒரு கப்
- வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- ஊளுந்து – ஒன்னரை டேபிள்
- ஸ்பூன் சர்க்கரை – அரை டேபிள் ஸ்பூன்
- தேங்காய் பால் – சிறிதளவு
- ஆப்ப சோடா – சிறிதளவு
- சோடா வாட்டர் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஆப்பம் அரைக்க முதலில், இட்லி அரிசி பச்சை அரிசி, ஒளுந்து வெந்தயம் ஆகியவற்றை நன்றாக 4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக ஆட்டிக்கொள்ளவும்.
அடுத்து மாவில், தேங்காய் பால் சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.

அடுத்து புளித்த மாவில் சிறிதளவு ஆப்ப சோடா மற்றும் சோடா வாட்டரை சேர்த்து கரைக்கவும்.பின்பு அடுப்பில் காடாய் வைத்து சூடேரியதும் அதில் மாவை இட்டு கடாயயை சுழற்றி வைக்கவும். ஆப்பம் தயாராகி விடும்.
