பொதுவாகவே நாம் அன்றபாடம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்கள் குறித்து சில வழக்கங்களை பின்பற்றி வருகின்றோம். இது பெரும்பாலும் மத கலாசாரங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது.

ஆனால் அப்படி நாம் பின்பற்றும் சில விடயங்களுக்கு பின்னால் சில துள்ளியமான சில உண்மைகளும் நம்பிக்கைகளும் நிறைந்துள்ளதுமடன் சில அறிவியல் உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றது.

அந்தவகையில், நமது முன்னோர்கள் கறிவேப்பிலையை மற்றவர்களின் கைககளில் நேரடியாக கொடுக்க கூடாது என சொல்லி வைத்திருக்கின்றார்கள்.அதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

காரணம் என்ன?

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள கறிவேப்பிலை சமையலில் பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம், அதன் சுவை மற்றும் வாசனை என்று தான் பெம்பாலானவர்கள் நினைக்கின்றார்கள்.

ஆனால் கறிவேப்பிலைக்கு அறிவிலின் பிரகாரம் குழம்பில் உள்ள நச்சுக்களை உறிஞ்சும் ஆற்றலும் அதிகமாக காணப்படுகின்றது.  கறிவேப்பிலை எதிர்மறை ஆற்றல்களை சேமித்து வைத்திருக்கும் என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

கறிவேப்பிலையை ஏன் மற்றவர்களின் கைகளில் கொடுக்க கூடாது? காரணம் இது தான்! | Why Do Not Give Curry Leaves To Others Hand

அதனால் தான் நாம் ஒருவரின் கைளில் நேரடியாக கறிவேப்பிலையை கொடுக்கும் போது நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அவர்களுக்கும், அவர்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நமக்கும் கடத்தப்படுவதான நம்பப்படுகின்றது.

உதாரணமாக நம் அயலவர் கைகளில் கறிவேப்பிலையை கொடுத்தால் அவர்களுக்கும் நமக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு அதிகம், அதற்கு காரணம் எதிர்மறை சக்திகள் கடத்தப்படுவதுதான்.  

கறிவேப்பிலையை ஏன் மற்றவர்களின் கைகளில் கொடுக்க கூடாது? காரணம் இது தான்! | Why Do Not Give Curry Leaves To Others Hand

ஆன்மீக நம்பிக்கைகளின்படியும், வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரமும் கறிவேப்பிலை எதிர்மறை ஆற்றலை (Negative Energy) ஈர்க்கும் சக்தி கொண்டது என குறிப்பிடப்படுகின்றது.

அதன் காரணமாகவே கறிவேப்பிலை செடிகளை வீட்டின் முன்புறம் அல்லது முற்றத்தில் வளர்ப்பதைத் தவிர்த்து, பின்புறத்தில் வளர்ப்பதே சிறந்தது என்ற முறையை முன்னோர்கள் பின்பற்றி இருக்கின்றார்கள்.