காலையில் எழுந்ததும் வாய் கசப்பாக இருந்தால் என்ன பிரச்சனை உடம்பில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலையில் தோன்றும் அறிகுறிகள்

காலையில் எழுந்ததும் வாய் கசப்பாகவோ, துவர்ப்பாகவோ காணப்பட்டால் இந்த அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உடலில் உள்நிலை ஆரோக்கியத்தை பற்றிய முன் எச்சரிக்கையாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வயிற்றில் உணவு சரியாக செரிக்கப்படாதபோது, தாக்கமே வாயின் சுவையில் பிரதிபலிக்கின்றது.

இதனால் புளித்த ஏப்பம், வாய் துர்நாற்றம், பசியின்மை போன்ற பிரச்சனை ஏற்படுவதுடன், செரிமான சரியாக செயல்படாத போது, நச்சுக்கள் தேங்கி கெட்ட சுவையை வாயில் வெளிப்படுத்தும்.

கல்லீரல் பிரச்சனையா?

அதே போன்று கல்லீரலின் செயல்பாடும் குறைவாக இருந்தால், ரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்படுவதுடன், செரிமானம் மந்தமாகி, வாயின் சுவை மாறிவிடும்.

மேலும் இரவு உணவுக்கு பின்பு பல் துலக்காமல் தூங்குவதாலும் வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்து வாய் துர்நாற்றத்தினையும், கசப்பான சுவையையும் ஏற்படுத்துகின்றது.

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே! | Morning These Symptoms Affect Liver

நீர்ச்சத்து குறைபாடு, அதிக எண்ணெய் மற்றும் காரணமான உணவு உட்கொள்வது, புகைப்பிடித்தால், மது அருந்துதல் போன்ற பழக்கமும் பிரச்சனையை தீவிரப்படுத்தும்.

உடம்பில் வைட்டமின் பி12 அல்லது சிங்க் குறைவாக இருந்தாலும் வாயில் சுவை மாற்றத்திற்கு காரணமாக இருக்கும்.

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே! | Morning These Symptoms Affect Liver

இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு தினமும் போதுமான தண்ணீர், நார்ச்சத்து உணவுகள் உட்கொள்வது, சரியான நேரத்தில் சாப்பிடுவது, காரமான மற்றும் இரவில் கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இரவில் திரிபலா பொடி உட்கொள்வது வயிற்றை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், இரவில் பல் துலக்கி, வாயை சுத்தமாக வைத்த பின்பே தூங்க செல்ல வேண்டும்.

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே! | Morning These Symptoms Affect Liver

ஆனாலும் நீண்ட நாட்கள் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்களை பார்த்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.