ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் பெண்ணொருவர் வக்கீலாக தன் தாயின் விவாகத்துக்காக வாதாடும் , கண்ணீர் மல்க வைக்கும் உணர்வுபூர்வமான வீடியோ இணையத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகின்றது.

மகா நடிகை சீசன் 2 

பெண்களின் நடிப்பு திறமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சி நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மகா நடிகை : பெண்ணின் கண்ணீர் மல்க வைக்கும் நடிப்பு திறன்! படுவைரலாகும் வீடியோ | Maha Nadigai Season 2 A Girl Hrart Mealthing Act

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சி ஏற்கனவே முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் மேலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மகா நடிகை : பெண்ணின் கண்ணீர் மல்க வைக்கும் நடிப்பு திறன்! படுவைரலாகும் வீடியோ | Maha Nadigai Season 2 A Girl Hrart Mealthing Act

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மூன்று முக்கிய பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், அனுபவம் மிக்க நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

குறித்த நிகழ்ச்சியின் அறிமுக எப்பிசோட்டில் பெண்ணொருவரின் கண்ணீர் மல்க வைக்கும் அசாத்திய நடிப்பு திறமைக்கு பராட்டுகள் குவிந்து வருகின்றது.