காலையில் சீக்கிரம் எழுந்தால் கிடைக்கும் நன்மையினை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக புதிதாக தொடங்கும் நாள் மிகவும் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள்.
இதற்கு சரியான உணவு எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றாலும் காலையில் சீக்கிரமாக தூங்கு எழ வேண்டும். அவ்வாறு காலையில் சீக்கிரம் தூங்கி எழுந்தால் கிடைக்கும் நன்மையை தெரிந்து கொள்வோம்.
நன்மைகள் என்ன?
அதிகாலை நேரம் அமைதியாக இருக்கும் என்பதால், சீக்கிரமாக எழும்புவதால் அவசரம் இல்லாமல் நாளை தொடங்குவதுடன், யோகா, நடைபயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி பெற முடியும்.
காலையில் சீக்கிரமாக எழும்புவதால் உடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் கிடைக்கும். மேலும் நடைபயிற்சி, யோகா செய்வதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும், இதய ஆரோக்கியமும் மேம்படும்.

மேலும் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படுவதால், படிப்பு மற்ற வேலைகளை திட்டமிடுதல் என அனைத்திலும் சரியாக திட்டமிடுதல் செய்ய முடியும். பல ஆய்வுகள் அதிகாலை எழும்புபவர்களின் உற்பத்திதிறன் அதிகமாக இருப்பதாக உறுதி செய்துள்ளது.
இயற்கை உயிரியல் கடிகாரத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றது. இரவில் சரியான தூக்கம் வரும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல் மேம்படுகின்றது.
காலையில் எழுவது சிறிய மாற்றமாக தோன்றினாலும், வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தினை உருவாக்கக்கூடிய சக்தி கொண்டது. இதனால் உடல்நலம், மனநலம், வேலை திறன், வாழ்க்கை ஒழுங்கு என பல துறைகளில் முன்னேற்றத்தினை பெற முடியும். .
