ஜோதிடக் கணிப்பின்படி, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். சூரியன், குரு, சந்திரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், புதன் மிதுனத்திலும், சுக்கிரன் சிம்மத்திலும், சனி மீனத்திலும் உள்ளனர்.

தற்போது கிரகங்கள் ராகு-கேதுவுக்கு இடையில் பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு தடைகள் மற்றும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ராகு-கேது பிடியில் இருந்து விடுபடும் கிரகங்கள்: இனி இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Six Planets Released From Rahu Ketu Who Get Luck

இந்நிலையில், ஜூலை 19ஆம் தேதி சந்திரன் சிம்மத்திலிருந்து கன்னிக்கு பெயர்ச்சி அடைவதால் ராகு-கேதுவின் தாக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.

இந்த சந்திரப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஜூலை 19 முதல் ராகு-கேதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பலன் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்

ராகு-கேது பிடியில் இருந்து விடுபடும் கிரகங்கள்: இனி இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Six Planets Released From Rahu Ketu Who Get Luck

ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், இதுவரை பேச்சு தொடர்பாக ஏற்பட்டுவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

பணியிடத்தில் மனக்குழப்பம் இல்லாமல் தெளிவான முடிவுகளை எடுத்து, செயல்பட முடியும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேலும் வலுப்படும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணக்கூடிய காலமாக அமையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனை ஏற்படும்.

கடகம்

ராகு-கேது பிடியில் இருந்து விடுபடும் கிரகங்கள்: இனி இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Six Planets Released From Rahu Ketu Who Get Luck

ராகு-கேதுவின் பிடியில் இருந்து சந்திரன் வெளியே வருவதால், இதுவரை மன அழுத்தம் மற்றும் குழப்பங்களை சந்தித்து வந்த கடக ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முடிவுகளை எடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கி, இனி தெளிவாகவும் தைரியமாகவும் செயல்படுவீர்கள்.

பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வழிகளில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும். 

மீனம்

ராகு-கேது பிடியில் இருந்து விடுபடும் கிரகங்கள்: இனி இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Six Planets Released From Rahu Ketu Who Get Luck

ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், பணியிடத்தில் இதுவரை எதிர்கொண்ட சிரமங்கள் குறையும்.

மன அழுத்தம் நீங்கி, நிம்மதி அதிகரிக்கும். குடும்பம் மற்றும் வேலை சார்ந்த பொறுப்புகளை திறம்பட கையாளும் திறன் அதிகரிக்கும்.

பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, வருமான வாய்ப்புகள் மேம்பட்டு நிதிநிலை சிறப்பாகும். நீண்ட கால கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.