பிரபல சின்னத்திரை நடிகையான மோனிஷா தனக்கு கணவர் செய்த கொடுமையைக் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிகை மோனிஷா

சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகை, நடிகைகளின் வாழ்வில் பல கஷ்டங்கள் காணப்பட்டாலும், அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் தனது வேலையினை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னத்தம்பி, பூவே பூச்சூடவா, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை மோனிஷா. 

படுக்கை அறையில் கேமரா வைத்து கணவர் கொடுமை... உண்மையை உடைத்த பிரபல நடிகை | Actress Monisha Shocking Revelations Divorce

சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பிரபல ரிவியில் நடைபெற்று வரும் செகண்ட் லவ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பேசிய மோனிஷா தனது திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமையைக் குறித்து பேசியுள்ளார். 

 

கணவரிடம் அனுபவித்த கொடுமைகள்

மோனிஷா கூறுகையில், தனது 8 ஆண்டு திருமண வாழ்க்கை நம்பிக்கை, துரோகத்தினால் முடிவிற்கு வந்தது என்று கூறியுள்ளார். தான் முழுமையாக நம்பிய தனது கணவர், ஒரு கட்டத்தில் சந்தேகம் கொண்டு அடித்து சித்ரவதை செய்து ஆரம்பித்தார்.

படுக்கையறையில் உறங்குவது, ஆடை மாற்றுவது இவற்றினை புகைப்படம் காணொளியினை எடுத்து வைத்துள்ளார். அதனை அவரது நண்பர்களிடம் காட்டிய நிலையில் அவர்கள், உனது பர்சனல் போட்டோவை பார்த்துவிட்டோம் என்று கூறிய போது உலகமே நொறுங்கிப்போனதாக இருந்தது. 

படுக்கை அறையில் கேமரா வைத்து கணவர் கொடுமை... உண்மையை உடைத்த பிரபல நடிகை | Actress Monisha Shocking Revelations Divorce

திருமணத்திற்கு பின்பு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் தன்னை நடிக்க அனுப்பாமல், தான் சம்பாதித்த பணத்தை தவறான வழியில் செலவழித்து, கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தினார். 

ஒரு கட்டத்தில் அவரிடம் விவாகரத்து கேட்டுள்ளார். அப்போது கணவர் விவாகரத்து தருகின்றேன் ஆனால் உனது 100 சவரனுக்கு அதிகமான நகையை தரமாட்டேன் என்று கூறினார். 

படுக்கை அறையில் கேமரா வைத்து கணவர் கொடுமை... உண்மையை உடைத்த பிரபல நடிகை | Actress Monisha Shocking Revelations Divorce

வேறு வழியின்றி அந்த நகைகளை இழப்பீடாக கொடுத்து விவாகரத்து பெற்றேன். விவாகரத்து பேப்பரில் நீதிபதி முன்பு கையெழுத்திடும் போது எனக்கே தெரியாமல் துள்ளி குதித்தாக கூறியுள்ளார்.

இவரது துள்ளலைப் பார்த்து நீதிபதி வியந்து, ஏன் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவ்வளவு நரக வேதனையை அனுபவித்துள்ளேன் என்று கூறியுள்ளார். மோனிஷாவின் இந்த காணொளிக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.