bigg boss tamil season10 : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கின்றது. 

இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 10-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்த முறை வழக்கமான திரையுலக பிரபலங்களுடன், சாதாரண மக்களும் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக கூறப்படுவதால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் | Netizens Criticize Joy Crizildaas Alleged Bb Entry

பிக் பாஸ் சீசன் 10-ல் யார் யார் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜாய் கிரிஸில்டா

அந்த வகையில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.எனினும், இந்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் | Netizens Criticize Joy Crizildaas Alleged Bb Entry

ஜாய் கிரிஸில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்

ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாகவும், தன்னையும் தனது குழந்தையையும் அவர் புறக்கணித்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் | Netizens Criticize Joy Crizildaas Alleged Bb Entry

 

அதன் பின்னர் குழந்தையின் பொறுப்புகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. மேலும், அண்மையில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாய் கிரிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜும் இணைந்து கலந்து கொண்டனர். இதனால், இருவருக்கும் இடையிலான விவகாரம் மீண்டும் பேசுபொருளானது.

பிக் பாஸ் வாய்ப்புக்கு கடும் விமர்சனங்கள் 

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் | Netizens Criticize Joy Crizildaas Alleged Bb Entry

 

சில இணையவாசிகள், குழந்தையின் தந்தை பெயருக்காக போராடிய நிலையில், குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகாத சூழலில் பிக் பாஸ் போன்ற நீண்டகால ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுவது குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும், அவர் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னணியில் விளம்பர நோக்கம் இருந்ததா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் ஜாய் கிரிஸில்டாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது குழந்தை தொடர்பான முடிவுகளை வைத்து அவரை விமர்சிப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா உண்மையிலேயே போட்டியாளராக பங்கேற்கிறாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.