பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் இன்று வெளியான ப்ரோமோ ஆடியன்ஸை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து லீடர், ஹவுஸ்மேட்ஸ் என அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக மாமன்றம் போன்ற அமைப்பில் பிக்பாஸ் நடைபெறுகிறது. போட்டியாளர்கள் ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர். 

கடந்த வாரம் ஆளும் அணியின் தலைவராக ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவராக வினோத் பாபுவும் தேர்வு செய்யப்பட்டனர். நடிகர் பிளாக் பாண்டி உடல் நலக் குறைவால் 3-வது நாளே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 10 வீட்டில் காமன் மேனில் தேர்வு செய்யப்பட்ட மணிவண்னனும், பிரபல நடிகை ஆனந்தியும் அடுத்தடுத்து வைல்டு கார்ட் மூலம் உள்ளே வந்தனர்.