பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படும் நிலையில் இந்த வாரம் ஒரு அதிர்ச்சி எலிமினேஷன் நடந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி  தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆனாலும், இந்த சீசன் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. அதில் நிகழ்ச்சி தொடங்கிய 3-வது நாளே பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக காமன் மேனில் இருந்து மணிவண்ணன் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். 

இதையடுத்து இரண்டாவது வாரத்தில் ஆனந்தி வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் மக்கள் யாருக்கு குறைவான வாக்குகளை அளிக்கிறார்களோ அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார். 

ஆனால் இந்த சீசனில் புதுவிதமாக, வீட்டின் கேப்டனாக இருப்பவர், டாஸ்கில் சரியாக பர்ஃபார்ம் செய்யாத மூவரை தேர்வு செய்வார். அவர்களில் யார் வெளியேற வேண்டும் என சக போட்டியாளர்கள் ஓட்டிங் செய்து, அதில் யாருக்கு அதிக வாக்குகள் வருகிறதோ அவர் எலிமினேட் செய்யப்படுவார். அப்படி கடந்த வாரம் சாவின்யா எலிமினேட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து இந்த வாரம் ஜாவித், ஜேசன் கெளஷி, அஷ்மிதா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து தான் ஒருவர் போட்டியாளர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். அந்த வகையில் ஜாவித் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும்,  மக்கள் அளிக்கும் ஓட்டிங் அடிப்படையிலும் இந்த வாரம் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த போட்டியாளர் யார் என்பது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தான் தெரியும். இருந்தாலும், போட்டியாளர்களால் சக போட்டியாளர் எலிமினேட் செய்யப்படும் முறையை மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.