நவகிரகங்களில் மனதின் காரகராகக் கருதப்படுபவர் சந்திரன். கடக ராசியின் அதிபதியான இவர், ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே தங்குவார்.

அந்த வகையில், அக்டோபர் 23ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்த சந்திரன், அங்கு ஏற்கனவே இருக்கும் சனி பகவானுடன் இணைந்து விஷ யோகத்தை உருவாக்கியுள்ளார்.

ஜோதிடத்தின்படி, இந்த விஷ யோகம் உணர்ச்சிகள், முடிவெடுக்கும் திறன், வேலை, நிதிநிலை, உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

12 ராசிக்காரர்களும் இதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என ஜோதிடர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

அப்படி சனி–சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள விஷ யோகத்தால் எந்த 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

மேஷம்

சனி–சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: இந்த 5 ராசிக்காரர்கள் கவனம்! | Saturn Moon Make Vish Yog Who Get Huge Problem

மேஷ ராசியின் 12ஆவது வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் திடீர் செலவுகள் ஏற்பட்டு, பட்ஜெட் பாதிக்கப்படலாம்.

கடன் வாங்கும் சூழலும் உருவாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

மிதுனம்

சனி–சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: இந்த 5 ராசிக்காரர்கள் கவனம்! | Saturn Moon Make Vish Yog Who Get Huge Problem

மிதுன ராசியின் 10ஆவது வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பணியிடத்தில் சிரமங்கள் ஏற்பட்டாலும், இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்

சனி–சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: இந்த 5 ராசிக்காரர்கள் கவனம்! | Saturn Moon Make Vish Yog Who Get Huge Problem

 

கடக ராசியின் 9ஆவது வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பேச்சிலும் நடத்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரத்திலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம்.

 

சிம்மம்

சனி–சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: இந்த 5 ராசிக்காரர்கள் கவனம்! | Saturn Moon Make Vish Yog Who Get Huge Problem

சிம்ம ராசியின் 8ஆவது வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. எனவே, நிதி மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

அவசரமாக எடுக்கும் முடிவுகள் இழப்பை ஏற்படுத்தலாம். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

கும்பம்

சனி–சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: இந்த 5 ராசிக்காரர்கள் கவனம்! | Saturn Moon Make Vish Yog Who Get Huge Problem

கும்ப ராசியின் 2ஆவது வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை

மற்றவர்களை நம்பிப் பணம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் ஆபத்தான முதலீடுகளைச் செய்தால் இழப்பு ஏற்படலாம். எனவே பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது பெரிய இழப்புகளை தவிர்க்க உதவும்.