கவுண்டமணி

இந்திய சினிமாவின் நகைச்சுவை கலைஞர்களில் கவுண்டமணியும் முக்கியமானவர். செந்திலுடன் சேர்ந்து செய்த காமெடிகள் இப்போதும் அழிவில்லாதது. இருவரும் பீக்கில் இருந்த சமயத்தில் காமெடி காட்சிகள் இருந்தாலே போதும் அப்படங்கள் ஹிட்டாகிவிடும் என்பார்கள்.

திரைத்துறையில் ஒரு நாளுக்கு சம்பளம் என்ற ஃபார்முலாவை வடிவேலுதான் ஆரம்பித்தார் என்ற பேச்சு உண்டு, ஆனால் அவருக்கு முன்பே அதற்கான விதையை போட்டது கவுண்டமணி தான். ஒரு நாளில் 8 மணிநேரம் நடித்தால் சம்பளமாக ரூ. 1 லட்சம் வரை கொடுக்கப்பட்டது.

நீங்க பெரிய ஆள் கிடையாதுன்னு சிவாஜியை கலாய்த்த கவுண்டமணி.. ஃபிளாஸ்பேக் | Goundamanis Hilarious Counter With Sivaji

உலக அரசியல், நடப்புகள் என்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்து அதை காமெடியாக வைத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தா கவுண்டமணி. படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கவுண்ட்டர்கள் விடுவதில் கவுண்டமணியை அடித்துக்கொள்ள யாரும் இல்லை.

 

நீங்க பெரிய ஆள்

அப்படி தேவர் மகன் படத்தை பார்த்துவிட்டு சிவாஜியிடமே, நீங்கள் பெரிய ஆள் என்று கதையில் காண்பிக்கிறார்கள். நீங்களோ ஒரு சின்ன பொண்ணு மிதித்து பொசுக்குன்னு செத்துப் போயிடுறீங்களே என்று கேட்டிருக்கிறார்.

அதேபோல், ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது, யார் மேக்கப் மேன் என்று கேட்டுள்ளார். அந்த ஒப்பனை கலைஞரும் வந்து தலையை காண்பிக்க, உடனே கவுண்டமணி, சரி வா இதைவிட நல்ல மூஞ்சி உனக்கு கிடைக்காது, மேக்கப் போட்டு கற்றுக்கொள் என்று கூறி அத்தனை பேரையும் சிரிக்க வைத்துள்ளர் கவுண்டமணி.