இன்ஸ்டா ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் இதற்கு தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது வாழ்க்கையில் வந்த மிகப்பெரிய நடிகன் என்று ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜோடி ஜெயம்ரவி ஆர்த்தி. மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்த நிலையில், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ரவி மோகன், அதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விவாகரத்து வழக்கில், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே விவாகரத்துக்கு அறிவிப்புக்கு பின் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்ட இவர்  பராசக்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்து வரும் கராத்தே பாபு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுததியுள்ளது. இதனிடையே, நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு, பாடகி, கெனிஷா ஃபிரான்சிஸூடன் இருக்கும்  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது. 

இது குறித்து ஆர்த்தி - கெனிஷா இடையே சமூகவலைதளங்களில் டீமாதல் எழுந்த நிலையில், கெனிஷா ரவி மோகனை விட்டு பிரிவதாகவும், சென்னையை காலி செய்வதாகவும் அறிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனிடையே, ரவி மோகன் - ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆர்த்தி அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறாா். 

அந்த வகையில் தற்போது ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லோரையும் விட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே… நடிப்பு, அதுக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் டா என பதிவிட்டுள்ளார். இதில் யாருடைய பெயரையும் ஆர்த்தி குறிப்பிடவில்லை. இருப்பினும், ரவி மோகனுடனான தற்போதைய பிரச்சனைகளின் பின்னணியில் இந்தப் பதிவு வெளியாகியிருப்பதால், அவர் ரவி மோகனைத்தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 

Arthi ravi

இந்த இன்ஸ்டா ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் இதற்கு தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.