Blood Type Personality Test Japanese: ஜப்பானில் மனிதர்களின் ரத்த பிரிவை வைத்து குணங்களை தெரிந்து கொள்ளும் நம்பிக்கை தற்போது நிலவி வருகின்றது.

இன்றைய காலத்தில் ஜோதிடத்தில் ஒருவரது பிறந்த நாள், தேதி இவற்றினை வைத்து அவர்களின் குணங்களை தெரிந்து கொண்டிருக்கும் நிலையில், ஜப்பானில் வாழும் மனிதர்கள் ரத்தப் பிரிவை வைத்து குணம் மற்றும் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்கின்றனர்.

ஜப்பானின் Ketsueki Gata (கெட்சுஎகி கட்டா) என்ற பிரபலமான நம்பிக்கையின் படி ஒருவரது ரத்த பிரிவுகள் அவர்களின் பழக்கங்கள், சுபாவங்கள் இவைகள் வெளிப்படுத்துவதாக கூறப்படுகின்றது.

1930ம் ஆண்டில் பேராசிரியர் டோகேஜி ஃபுருகாவா இரத்த பிரிவிற்கும், மனிதர்களின் குணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த நிலையில் ஜப்பானில் இவை பிரபலமடைந்துள்ளது.
 

இன்றும் ஜப்பானில் நட்பு, காதல், திருமணம் இவற்றினை சிந்திக்கும் போது ரத்த பிரிவுகளையும் கவனத்தில் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வேலைக்கு ஆட்களை தெரிவு செய்யும் போதும் இந்த நம்பிக்கையினை பயன்படுத்துகின்றனர்.

மனிதர்களின் ரத்த வகைகள் O, A, B மற்றும் AB என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் ஆன்டிஜென்களின் அடிடைப்படையிலேயே இந்த ரத்த பிரிவுகளை கண்டுபிடிக்கின்றனர்.

அந்த வகையில் எந்தெந்த ரத்த வகைகளைக் கொண்டவர்கள் எவ்வாறான குணங்களை கொண்டுள்ளனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
 

O இரத்தப் பிரிவு

O ரத்த பிரிவை சேர்ந்தவர்கள் மற்றவர்களுடன் எளிதாக பழகக்கூடியவர்கள். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களாக உள்ளனர்.

புதிய விடயங்களை தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டு இவர்களின் படைப்பாற்றல் அனைவரையும் ஈர்கக்ககூடியதாக இருக்குமாம்.

தனக்கென தனி அடையாளத்தினை உருவாக்குவதுடன், இயல்பாக தலைமைப்பண்பு மற்றும் தன்னம்பிக்கை, துணிச்சல் கொண்டவர்களாகவும், சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவராகவும் இருக்கின்றனர்.

எந்த சவாலான சூழ்நிலையிலும் மன அழுத்தத்தினை சமாளிக்கும் திறன் இவர்களிடம் அதிகமாக இருக்குமாம். அமைதியான சூழலை விரும்புவதுடன், உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலும் ஆர்வமாக இருப்பார்கள்.

குணத்தை காட்டிக் கொடுக்கும் ரத்த பிரிவு.... உங்களது ரத்த பிரிவு என்ன? | Your Blood Type Will Tell About Your Personality

 

A இரத்தப் பிரிவு

A ரத்த பிரிவைகச் சேர்ந்தவர்கள் மிக கவனத்துடன் எதையும் செய்பவர்கள். எதையும் திட்டமிட்டும் செய்வார்கள்.

ஒவ்வொரு விடயத்தையும் துல்லியமான ஆராய்ந்து சிறிய குறைகளைக் கூட செய்ய முயற்சிக்கும் குணம் கொண்டவர்கள்.

வேலையில் முழுமையாக செயல்படுவதுடன், பொறுமை, ஒழுக்கம், விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். மேலும் இவர்கள் தங்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது.

குணத்தை காட்டிக் கொடுக்கும் ரத்த பிரிவு.... உங்களது ரத்த பிரிவு என்ன? | Your Blood Type Will Tell About Your Personality

 

B இரத்தப் பிரிவு

B வகை ரத்த பிரிவைக் கொண்டவர்கள் A வகை ரத்த பிரிவினரைப் போன்று சிந்தித்து செயல்படுவதுடன், O வகை ரத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் போன்று லட்சியத்தினை நோக்கி முன்னேறுவார்கள்.

தொடங்கும் எந்த வேலையையும் சிறப்பாக முடிக்கும் விடாமுயற்சி கொண்டவர்கள். தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம் இவர்களின் தனிச்சிறப்பு ஆகும்.

மேலும் தங்களுக்கு ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொள்ளவும், மற்றவர்களின் உணர்வுகளையும், கருத்துக்களையும் நன்றாக புரிந்து கொள்வார்கள்.

மனநிலை சில நேரங்களில் மாறுபட்டாலும், இயல்பான குணம், ஈர்ப்பு திறன் மற்றவர்களிடம் எளிதில் நெருக்கத்தினை ஏற்படுத்துமாம்.

குணத்தை காட்டிக் கொடுக்கும் ரத்த பிரிவு.... உங்களது ரத்த பிரிவு என்ன? | Your Blood Type Will Tell About Your Personality

AB இரத்தப் பிரிவு

AB ரத்த பிரிவு கொண்டவர்கள் வசீகரமானவர்களாகவும், எளிதில் அனைவரிடம் பழகக்கூடியவராகவும் இருப்பதுடன், நேர்மறையான குணங்களும் இவர்களிடம் இருக்குமாம்.

சில நேரங்களில் தைரியமாக இருக்கும் இவர்கள் சில நேரங்களில் கூச்ச சுபாவத்துடன் இருப்பார்களாம். புத்திசாலித்தனம், உதவும் மனப்பான்மை இவர்களின் தனிச்சிறப்பு ஆகும். மன அழுத்தத்தை எளிதில் எதிர்கொள்ளமுடியாமல் இருப்பார்கள்.

மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்பாத இவர்கள் தனக்கென தனி வழியில் வாழ்வதையே விரும்புகின்றனர்.