ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனிபகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்குபவர் சனிபகவான் என்பது பாரம்பரிய ஜோதிட நம்பிக்கையாகும்.

அந்த வகையில், வரும் டிசம்பர் 11ஆம் திகதி சனிபகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து நேர்கதிக்கு மாறவுள்ளார். இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தொழில் மற்றும் பொருளாதாரம் தொடர்பான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மேஷம், சிம்மம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அல்லது இடமாற்றம் தொடர்பான முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பம் மற்றும் பணியிடத்தில் சில கருத்து வேறுபாடுகளும் உருவாகலாம். எனவே, முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.