நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ​போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்காக மேலும் 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.