சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த குந்தன் (வயது 23) என்பவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சீமா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சீமா தனது கணவரு டன் சிவகாசி வந்துவிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இது குறித்து தகவல் அறிந்த எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.