சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.
உடனடி என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் அவர் சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் உண்மை தன்மையை அறிந்துக் கொள்வதற்காக அததெரண சுகாதார அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.
எவ்வாறாயினும், அவ்வாறான சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌவிடம் அததெரண தொடர்பு கொண்டு வினவிய போது, அவ்வாறான சம்பவம் எதுவும் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில அதில் ஒருவர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சருக்கு கொரோனா?
- Master Admin
- 23 January 2021
- (533)

தொடர்புடைய செய்திகள்
- 02 December 2020
- (1103)
புரெவி புயல் - வளிமண்டலவியல் திணைக்களம்...
- 27 April 2025
- (259)
மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்...
- 13 May 2021
- (435)
ரஷ்யாவில் இருந்து சுமார் 6 லட்சம் ஸ்புட்...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்
- 04 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.