யாழ்ப்பாணம், நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குறித்த பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக திறப்பு
- Master Admin
- 27 January 2021
- (429)

தொடர்புடைய செய்திகள்
- 27 May 2025
- (216)
மே 27 இன்று நாள் எப்படி இருக்கும்? இந்த...
- 08 April 2021
- (538)
பிரபாகரனின் ஒளிப்படம்: இளைஞனுக்கு சிக்கல...
- 03 May 2023
- (215)
மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளி...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.