களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நவகமுவ, மாபிடிகம பாலத்திற்கு அருகில் நேற்று (01) மாலை நீராட சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலத்தை இன்று காலை கடற்படையினர் மீட்டிருந்தனர்.
உயிரிழந்த இளைஞன் ஒருவன் நேற்று தொழில் நிறுவனம் ஒன்றில் நேர்முகப்பரீட்சையில் கலந்து கொண்டு அதில் தெரிவான சந்தோசத்தில் களனி கங்கையின் மாபிட்டிகம பாலத்திற்கு அருகில் மது விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
மது அருந்திவிட்டு நீராட சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் நீரில் மூழ்கிய சந்தர்பத்தில் ஏனைய நண்பர்கள் இருவரும் கரையில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கபடுகின்றது.
சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞன் ஒருவனும் 19 வயதுடைய இளைஞன் ஒருவனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் உயிரை தொலைத்த இளைஞர்கள்
