வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவரையுமாக ஐவரை நேற்று  இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

நெடுங்கேணி பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை நால்வர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர்.

குறித்த நால்வரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்த போது சிறு சிறு பொதிகளாக கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர்.

நெடுங்கேணி – பட்டிக்குடியிருப்பு, கீரிசுட்டான், மதுரம்பிட்டி போன்ற பகுதிகளை சேர்ந்த (19,27,40,48) வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருடைய பட்டிக்குடியிருப்பு வீட்டில் சோதனை மேற்கொண்ட போது யானைத்தந்தமும் கைப்பற்றப்பட்டதுடன் 68 வயதுடைய ஒருவரையும் கைது செய்த இராணுவத்தினர் ஐவரையும் நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.