கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த புதன்கிழமை (28) மாலை மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்களில் நேற்று (30) இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42) மற்றும் எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) (மரணித்த இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறையில் சோகம் - மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி!
- Master Admin
- 01 May 2021
- (449)

தொடர்புடைய செய்திகள்
- 30 January 2025
- (124)
இரவில் வெளியில் சென்றால் வாசனை திரவியம்...
- 10 April 2025
- (198)
வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபா...
- 13 May 2025
- (212)
உங்களை தேள் கொட்டி விட்டதா? முதலில் இதை...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.