தெற்கு அதிக்ஷேக நெடுஞ்சாலையின் மத்தள இடமாற்றத்தில் சேவையாற்றும் சிலர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் குறித்த இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களும் சூரியவெவ வௌியேற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இமதுவ இடமாற்றத்தின் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள காரணத்தினால் அப்பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.