சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பினால் இன்று உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா மக்களின் உயிரைப் பறித்து வரும் நிலையில், உலகநாடுகளின் நிலை படுமோசமாக சென்றுள்ளது.

அதிலும் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், பாமர மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கொரோனா மற்றும் மாரடைப்பு காணமாக உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து பிரபலங்களின் உயிரிழப்பால், இந்த அதிர்ச்சியிலிருந்து திரையுலகினர் மீளாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் இயக்குநர் பொன்ராமிடம் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி வந்ததோடு, சீரியலிலும் நடித்து வந்தார். இந்த தகவலையும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பவுன் ராஜின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.